வசந்த காலம் தொடங்கியதும் வரக்கூடிய முதல் விரத தினமாகவும் விசேஷ தினமாகவும் திகழக்கூடியது தான் மாசி மகம். இந்த மாசி மக நாள் அன்று பல தெய்வங்களுக்கு சிறப்பு மிகுந்த வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும். தெய்வங்களுக்கு புண்ணிய நதிகளுக்கும் ஏற்பட்ட பாவ தோஷங்களை நீக்கக்கூடிய அற்புத நாளாக தான் இந்த மாசி மகம் திகழ்கிறது. பொதுவாக பல ஆலயங்களில் உற்சவமூர்த்தியை புனித நீராட்டி திரும்பவும் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதனால் தான் அருகில் இருக்கக்கூடிய நீர்நிலைகளில் புனித நீர் ஆட வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் வறுமை நீங்குவதற்கு வாங்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுபிட்சம் நிலவ வாங்க வேண்டிய பொருட்கள்
மாசி மாதமே சிறப்புக்குரிய மாதம் தான். அதிலும் மாசி மகம் என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக திகழ்கிறது. ஏனென்றால் அன்றைய நாளில் தான் சிவபெருமான் புண்ணிய நதிகளின் பாவங்களை நீக்கினார் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் தாட்சாயனி அவதாரம் செய்த நாளாகவும் இந்த நாள் திகழ்கிறது. மேலும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் சில வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் குடும்பம் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையும்.
மகம் நட்சத்திரம் என்பது கேதுவிற்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. கேதுவிற்குரிய தானியமாக கொள்ளு திகழ்கிறது என்பதால் அன்றைய தினத்தில் கொள்ளை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். இந்த கொள்ளை சுண்டலாக தயார் செய்து தெய்வங்களுக்கு நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வதன் மூலம் கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் முருகன் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த நாளாக கருதப்படுவதால் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான சந்தனத்தை சிறிதளவாவது வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் இது சிவபெருமானுக்கு உரிய நாள் என்பதால் சிவபெருமானுக்காக தாமரை மலர்களை வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அன்றைய தினம் புதன்கிழமை. புதன்கிழமை என்பது விநாயகருக்கும் புதன் பகவானுக்கும் உரிய கிழமை என்பதால் பச்சை பயரை வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்யலாம் என்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதன் மூலமும் நல்ல பலன் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அன்றைய தினம் அம்பாள் அவதரித்த தினம் என்பதால் அம்பாளுக்கு மிகவும் உகந்த பொருளாக திகழக்கூடிய குங்குமத்தை வாங்கி வந்து அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலமும் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மனநிம்மதியும் மனதெளிவும் கிடைக்க மாசி மகம் பரிகாரம்
மேற் சொன்ன இந்த பொருட்களில் எது தங்களால் வாங்க இயலுமோ அதை முழு மனதோடு நிறைவோடு வாங்கி வந்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு பிறகு அதை உபயோகப்படுத்துவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை நிலை முற்றிலும் நீங்கி சுபிக்ஷம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிகழ்வு செய்து கொள்கிறோம்.