வாராஹியின் செல்லப் பிள்ளையாக நீங்கள் மாற வேண்டுமா. அன்னையின் மடியில் அமர்ந்து வேண்டிய வரங்களை பெற வேண்டுமா. வாராஹித் தாயை இந்த வளர்பிறை பஞ்சமி திதியில், பின் சொல்லக்கூடிய முறையில், வாராஹி முத்திரையை கையில் வைத்துக்கொண்டு, இந்த வாராஹி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தாலே போதும். அன்னையின் செல்லப் பிள்ளையாக மாறும் பாக்கியம் உங்களை வந்து சேரும்.
இன்று 2 – 4 – 2025 புதன்கிழமை முழுவதும் பஞ்சமி திதி இருக்கிறது. இன்று மாலை 6:30 மணிக்கு மேல், இரவு 11:00 மணிக்குள் நீங்கள் வாராகிய எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். காலை நேரத்தில், மாலை நேரத்தில், சூரியன் இருக்கும்போது வாராகி வழிபாட்டை செய்தாலும் தவறு கிடையாது.
இருந்தாலும் வராஹி வழிபாட்டிற்கு உகந்த நேரம் இருள் சூழ்ந்த நேரம் என்பதற்காக தான், இந்த நேரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் வாராஹி திருவுருவப்படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வாராஹியை மனதிற்குள் நிறுத்தி வையுங்கள். பிறகு உங்கள் கையில் வாராகி முத்திரையை வைக்க வேண்டும்.
இடது கையில் இருக்கும் கட்டைவிரலை உள்பக்கமாக மடித்துக் கொள்ள வேண்டும். இடது கை ஆள்காட்டி விரலோடு வலது கை கட்டை விரலை இணைத்து வைத்து, இரண்டு கைகளையும் பின்னிக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு இந்த பதிவில் படிக்கும் போது கொஞ்சம் புரியாதது போல இருக்கும், youtube இல் வாராகி முத்திரை என்று டைப் செய்தாலே, உங்களுக்கு இந்த முத்திரை எப்படி செய்வது என்ற விவரம் தெளிவாக தெரியும்.
அந்த முத்திரையை கையில் வைத்துக்கொண்டு கையை இதயத்திற்கு நேராக வைத்துக் கொண்டு வாராகியை நினைத்து இந்த மந்திரத்தை உங்களால், முடிந்தவரை செல்லுங்கள். கணக்கு என்பதை கிடையாது. எவ்வளவு தூரம் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ அவ்வளவு தூரம் வாராகியிடம் நீங்கள் ஐக்கியமாகிவிடுவீர்கள்.
இன்னும் சொல்லப்போனால், காலப்போக்கில் வாராகியிடம் உரையாடும் அளவுக்கு, உங்களுக்கு சக்தி தொடங்கிவிடும். இன்று தொடங்கி 48 நாள் இந்த முத்திரையை பிடித்து இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு வாராஹி தரிசனம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வாராஹி மந்திரம்
வார்த்தாளி வார்த்தாளி வாராஹி தாயே நமஹ !
எல்லோராலும், எல்லா சமயத்திலும் உச்சரிக்க கூடிய வாராகி மந்திரம் இது. இன்றைய தினம் இந்த மந்திரத்தை உச்சரித்து பார்க்கும் போதே, நீங்கள் வாராஹி தாயை உணருவீர்கள். வீட்டில் கட்டாயம் வாராகி யின் திரு உருவப்படம் இருந்தால் தான், இந்த வாராகி வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மனதில் வாராஹியை நினைத்து இந்த ஆன்மீகம் மந்திரத்தை சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஏப்ரல் மாதம் முழுவதும் பணவரவு உண்டாக
உங்கள் வாழ்வில் எதிரி தொல்லை இருக்காது. தீரா துன்பம் வராது. கண் திருஷ்டி விழாது. ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் வீடு வார்ஹியின் அரவணைப்புக்குள் வந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த பதிவு சமர்ப்பணம்.