- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏப்ரல் மாதம் முழுவதும் பணவரவு உண்டாக

ஏப்ரல் மாதம் முழுவதும் பணவரவு உண்டாக

- Advertisement -

நம்முடைய எண்ணங்களின் பிரதிபதிப்பால்தான் நம்முடைய வாழ்க்கை நடக்கிறது என்று கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் தான் நாம் எப்பொழுதுமே நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நம்முடைய எண்ணத்திற்கு அந்த அளவிற்கு சக்தி இருக்கிறது. நாம் எண்ணுகின்ற எண்ணத்தை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றிவிடும் என்றே கூறப்படுகிறது. அதனால் தான் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்சத்திடம் நாம் எந்த ஒரு வரியை கூறினால் பண வரவிற்கு எந்தவித குறையும் இருக்காது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஏப்ரல் மாதம் பணவரவு உண்டாக

எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். நாம் நம்முடைய ஆழ்மனதில் என்ன நினைக்கிறோமோ அதன் வெளிப்பாடாக தான் நம்முடைய செயலும் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதை தான் ஆன்மீக ரீதியாக வாக் தேவதை என்று ஒரு தேவதை இருப்பாள், அவள் எப்பொழுதும் சதாப்து என்று கூறிக் கொண்டே இருப்பாள், நாம் நல்லதை சொன்னோம் என்றால் நல்லதே நடக்கும் தீயதை நினைத்தோம் என்றால் தீயவை நடக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தில் தினமும் நமக்கு தேவையான அளவு பண வரவு வரவேண்டும். இதுவரை இருந்த பண பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும், எந்த சூழ்நிலையிலும் பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது என்று நினைப்பவர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் தினமும் கூற வேண்டிய ஒரு வரி இருக்கிறது. அதை முழு மனதோடு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து கூறினாலேயே பிரபஞ்சம் அதை உத்திரகித்து நமக்கு தேவையான பண வரவை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஒரு வரியை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் மனதில் எதையும் யோசிக்காமல் தெளிவான மனதுடன் தெளிவான சிந்தனையுடன் இந்த ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி கூற வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் கூறினால் போதும். இதற்காக எந்தவித வழிபாடும் பூஜைகளும் பரிகாரமும் தேவையே இல்லை. அந்த ஒரு வரி வாக்கியம்:

- Advertisement -

தெய்வீக எண்ணிக்கை என்னிடம் பெருகட்டும்

இந்த வாக்கியத்தை ஐந்து நிமிடம் மட்டும் தொடர்ச்சியாக நாம் நிறுத்தி நிதானத்துடன் பொறுமையோடு கூறினோம் என்றால் நம்மை அறியாமலேயே நம்மிடம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதன் மூலம் நாம் செய்யக்கூடிய செயல்களில் எந்தவித தடுமாற்றமும் ஏற்படாது. தடுமாற்றம் இல்லாத செயலை செய்வதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:வேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்

அதிசக்தி வாய்ந்த இந்த பிரபஞ்சத்திடம் நாம் என்ன கேட்கிறோமோ அது கண்டிப்பான முறையில் கிடைக்கும். முழு மனதோடு இந்த வரியை தினமும் கூறுபவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் நிறைவான பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்