2018 ஆம் ஆண்டில் நீங்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்களும் அதன் பயன்களும்.

Sivan God

பொதுவாங்க பௌர்ணமி விரதம் என்பது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு விரதம் இருக்க கூடிய நாளாகும். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் வரும் பௌர்ணமி தினங்கள் எவை ? எந்த பௌர்ணமியில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

viradham

ஜனவரி 1 (மார்கழி 17)
2018ம் ஆண்டின் முதல் நாளே பௌர்ணமி தான். இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி பெருமாளை வழிபாட்டால் உடல் ஆரோக்கியம் சீரடையும் அதோடு பிறவி இல்லா பெருநிலையை அடைவதற்கு இந்த விரதம் துணை நிற்கும்.

ஜனவரி 31 (தை 18)
தை பூசத்தோடு வரும் இந்த பௌர்ணமி விசேஷமானது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் ஆயுள் பலம் கூடும்.

murugan

மார்ச் 1 (மாசி 17)
மாசி மகத்தோடு வரும் இந்த பௌர்ணமி நாளில் சிவனை வழிபடுவது சாலச்சிறந்தது. இதே நாளில் தான் ஹோலி பண்டிகையும் வருகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி சிவன் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் வாழ்வில் உள்ள அத்தனை துன்பங்களும் பறந்தோடும்.

மார்ச் 31 (பங்குனி 17)
மார்ச் மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமி இது. தமிழ் மாதமான பங்குனியில் வரும் இந்த பௌர்ணமியில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி சிவனையோ, முருகனையோ ராமனையோ வழிபடுவதால் நமக்கு புண்ணியம் வந்து சேரும்.

ஏப்ரல் 29 (சித்திரை 16)
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி என்பது மிக சிறந்த பௌர்ணமி ஆகும். இந்த நன்னாளில் பலர் திருவண்ணாமலை கிரிவலம் வருவது வழக்கம். திருவக்கரை போன்ற பல கோவில்களிலும் இந்த நன்னாள் மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டதால் வீட்டில் எப்பொழுதும் உணவிற்கு பஞ்சம் இருக்காது. தானியங்கள் வந்து சேரும். சித்ரா பௌர்ணமி 2018 ஞாயிற்று கிழமை அன்று வருகிறது.(Chitra pournami 2018)

மே 29 (வைகாசி 15)
வைகாசி மாதத்தில் வரும் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபடுவதன் பயனாக திருமண தடைகள் நீங்கும். பிள்ளைகளின் அறிவு மேம்படும்.

Advertisement

murugan

ஜூன் 27 (ஆனி 13 )
ஆனி மாதத்தில் வரும் இந்த பௌர்ணமியில் விரதம் இருந்து ஈசனுக்கு முக்கனிகளை படைத்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் சந்தோசம் நிலைத்திருக்கும்.

ஜூலை 27 ( ஆடி 11 )
ஆடி மாதத்தில் வரும் இந்த பௌர்ணமி ஒரு வாஸ்து நாளாகும். இந்த நன்னாளில் விரதம் இருந்து விளக்கேற்றி அம்மனை வழிபடுவதன் பயனாக தேவைகள் பூர்த்தியடையும்.

amman

ஆகஸ்ட் 26 (ஆவணி 10)
ஆவணி அவிட்டதோடு வரும் இந்த பௌர்ணமி விசேஷமானது. இந்த நன்னாளில் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். உறவு மேம்படும்.

செப்டம்பர் 24 (புரட்டாசி 8 )
புரட்டாசி மாதத்தில் வரும் இந்த பௌர்ணமியில் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். தடைகள் நீங்கும்.

perumal

அக்டோபர் 24 ( ஐப்பசி 7)
அன்னாபிஷேக பெருவிழா நாளில் வரும் இந்த பௌர்ணமி விசேஷமானது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி சிவ பெருமானை வழிபடுவது நல்லது. சிவன் கோயிலிற்கு சென்று சிவனுக்கான அன்னாபிஷேக பூஜையில் கலந்து கொள்வதன் பயனாக புண்ணியங்கள் வந்து சேரும்.

நவம்பர் 22 (கார்த்திகை 6)
கார்த்திகை தீப பெருவிழா நடப்பது இந்த நன்னாளில் தான். இந்த நாளில் விரதம் இருந்து வீட்டில் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவதன் பயனாக பேரும் புகழும் வந்து சேரும். வேண்டியவை கை கூடும்.

Sivan God

இதையும் படிக்கலாமே:
கருவறையில் திரை போட்ட பின்பு மூலவரை வணங்கலாமா ?

டிசம்பர் 22 (மார்கழி 7)
இந்த வருடத்தில் மார்கழி மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமி இது. இந்த நன்னாளில் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி சிவனை வழிபாட்டால் வீட்டில் செல்வம் சேரும்.