திருவண்ணாமலை கிரிவலம் 2018 தேதிகள் மற்றும் பலன்கள்

Thiruvannamalai

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. பௌர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரின் அருளை பெறுவது வழக்கம். அந்த வகையில் 2018 ஆண்டின் திருவண்ணாமலை கிரிவலம் தேதிகள் மற்றும் கிரிவலம் வருவதற்கான முறைகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

sivan

ஜனவரி :

ஜனவரி மாதம் 1 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் அடுத்தநாள்(2 ஆம் தேதி ) காலை 8.30 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.

ஜனவரி மாதம் 30 ஆம் தேதி இரவு 9.36 மணி முதல் அடுத்தநாள்(31 ஆம் தேதி ) இரவு 7.30 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


பிப்ரவரி:
2018 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி ஏதும் இல்லை.

- Advertisement -

மார்ச்:  (Girivalam 2018 March dates and timings)

மார்ச் மாதம் 1 ஆம் தேதி காலை 8.15 மணி முதல் அடுத்தநாள்(2 ஆம் தேதி ) காலை 6.30 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.

மார்ச் மாதம் 30 ஆம் தேதி இரவு 7.15 மணி முதல் அடுத்தநாள்(31 ஆம் தேதி ) மாலை 6.20 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


ஏப்ரல்: (Girivalam 2018 April dates and timings)

ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி காலை 7.05 மணி முதல் அடுத்தநாள்(30 ஆம் தேதி ) காலை 6.50 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


மே: (Girivalam 2018 May dates and timings)

மே மாதம் 28 ஆம் தேதி இரவு 7.35 மணி முதல் அடுத்தநாள்(29 ஆம் தேதி ) இரவு 8.30 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


ஜூன்: (Girivalam 2018 June dates and timings)

ஜூன் மாதம் 27 ஆம் தேதி காலை 9.35 மணி முதல் அடுத்தநாள்(28 ஆம் தேதி ) காலை 10.20 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


ஜூலை: (Girivalam 2018 July date and timings)

ஜூலை மாதம் 26 ஆம் தேதி இரவு 12.20 மணி முதல் அடுத்தநாள்(27 ஆம் தேதி ) இரவு 2.25 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


ஆகஸ்ட்: (Girivalam 2018 August dates and timings)

ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மாலை 4.05 மணி முதல் அடுத்தநாள்(26 ஆம் தேதி ) மாலை 5.40 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


செப்டம்பர்: (Girivalam 2018 September dates and timings)

செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி காலை 8.02 மணி முதல் அடுத்தநாள்(25 ஆம் தேதி ) காலை 8.45 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


அக்டோபர்:(Girivalam 2018 October dates and timings)

அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி இரவு 10.45 மணி முதல் அடுத்தநாள்(24 ஆம் தேதி ) இரவு 10.50 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


நவம்பர்: (Girivalam 2018 November dates and timings)

நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பகல் 12.45 மணி முதல் அடுத்தநாள்(23 ஆம் தேதி ) பகல் 12.02 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


டிசம்பர்: (Girivalam 2018 December dates and timings)

டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் அடுத்தநாள்(23 ஆம் தேதி ) காலை 8.30 மணிவரை பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனின் அருளையும் சித்தர்களின் அருளையும் பெறலாம்.


Sivan God

திருவண்ணாமலை கிரிவலம் வருவது இறைபக்தியை அதிகரிக்க செய்வதோடு உடலையும் உள்ளத்தையும் தெளிவடைய செய்கிறது. ஆரம்ப காலத்தில் வெகு சிலரே திருவண்ணாமலை கிரிவலம் வந்துகொண்டிருந்தனர். ஆனால் காலம் மாற மாற அருணாச்சலேஸ்வரரின் அருளால் பல்லாயிரம் பேர் இப்போது மாதம் தோறும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலம் தூரம் :

திருவண்ணாமலை கிரிவலம் தூரம் என்பது 14 கிலோமீட்டர் ஆகும். கிரிவலம் செல்லும் பாதையில் அஷ்ட லிங்கம் எனப்படும் இந்திரலிங்கம், யமலிங்கம், அக்னிலிங்கம், வாயு லிங்கம், நிருத்திலிங்கம், குபேர லிங்கம், வருணலிங்கம் , ஈசான்யலிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளது குறிப்பிட தக்கது.

sivan

திருவண்ணாமலை கிரிவலம் விதிமுறைகள் :

குளித்துவிட்டு தூய்மையான ஆடையை உடுத்திக்கொண்டு மலையை சுற்ற ஆரமிக்க வேண்டும். திருவண்ணாமலை கிரிவலம் வருகையில் குடும்ப கதைகளை பேசிக்கொண்டு வரக் கூடாது. “சிவாய நாம” அல்லது “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரலாம். அல்லது சிவனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டு அமைதியாக வரலாம் அல்லது சிவனை போற்றும் பஜனைகளை பாடிக்கொண்டு கிரிவலம் வரலாம். திருவண்ணாமலை கிரிவலம் வருகையில் யாரிடமும் எதையும் தானமாக பெறக் கூடாது. காலில் செருப்பை அணியாமல் திருவண்ணாமலை கிரிவலம் வர வேண்டும். கிரிவல பாதையில் பல சாதுக்கள் அமர்ந்திருப்பார் அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் நல்லது.

திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் :

எவர் ஒருவர் முறையாக திருவண்ணாமலை கிரிவலம் வருகிறாரோ அவர் தன் வாழ்நாளில் செய்த பாவங்கள் எல்லாம் சிவன் அருளால் விலகும். திருவண்ணாமலை கிரிவலம் வருகையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பலன் உண்டு. ஆகையில் ஒவ்வொரு அடியையும் சிவ சிந்தனையோடு எடுத்துவைப்பதே சாலச்சிறந்தது. வயோதிகர்கள் மற்றும் நோயுற்றோர்கள் திருவண்ணாமலை கிரிவலம் வருவது சற்று கடினம் தான். அப்படி பட்டவர்கள் மனதில் திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும் அவர்களுக்கு கிரிவலம் வந்ததற்கான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
பிரதோஷம் நாட்கள் 2018

English overview:

In this article we have explained about Thiruvannamalai girivalam 2018 dates, timings are here.  Thiruvannamalai girivalam distance in km and palangal in Tamil.