கருவறையில் திரை போட்ட பின்பு மூலவரை வணங்கலாமா ?

hanuman
- Advertisement -

நாம் இறைவனை தரிசிக்க கோயிலிற்கு செல்கையில் சில நேரங்களின் அபிஷேகத்திற்காக திரை போட்டு கருவறை மூடப்பட்டிருக்கலாம். அது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்யவேண்டும் ? இறைவனிடம் ஒரு பக்தன் எப்படி வேண்ட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

vinayagar

நம் முன்னோர்கள் இறைவனின் சிலையை மிக அழகாக அமைத்து அந்த சிலைக்கு வைர வைடூரிய நகைகளை அணிவித்ததன் முக்கிய நோக்கமே, நாம் கோயிலிற்கு சென்றவுடன் நமது கண்கள் இறைவனை தவிர வேறு எதையும் பார்க்க கூடாது என்பதற்காக தான். கண்கள் இறைவனின் அழகை ரசிக்க தொடங்கினால் நமது மனமானது அவர் அழகில் மூழ்கி விடும். அவரையே நினைக்க தூண்டும்.

- Advertisement -

அபிஷேகத்திற்காக கருவறை திரை போட்டு மூடி இருந்தால் அந்த சமயங்களில் நாம் இறைவனை பார்க்க இயலாது ஆனால் நம்மை அப்போதும் இறைவன் பார்த்துக்கொண்டு தான் இருப்பார். ஆகையால், “இறைவா உன் அழகை காண நான் ஓடோடி வந்துள்ளேன், எனக்கு இன்று ஒரு சிறப்பான தரிசனத்தை தந்து அருள்புரிவாய்” என மனதில் வேண்டிக்கொண்டிருக்க வேண்டும்.

amman

கருவறையின் திரை விலகிய பிறகு, இறைவனிடம் எனக்கு இதை தா அதை தா என வேண்டாமல். இறைவா எனக்கு என்ன வேண்டும் என்பதை நீ அறிவாய் ஆகையால் எனக்கு வேண்டிய நல்லதை கொடுத்து என்னிடம் உள்ள தீயவற்றை விளக்கி அருள்புரிவாய் என வேண்டுவதே சிறந்தது.

- Advertisement -

Perumal

இதையும் படிக்கலாமே:
அம்மனுக்கு தக்காளியால் அபிஷேகம் நடக்கும் வினோத கோவில்

 

இறைவனிடம் வேண்டுகையில் கண்களை மூடிக்கொண்டு தான் வேண்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. கண்களை திறந்தும் வேண்டலாம். ஆனால் நமது பார்வையும் மனமும் இறைவன் மீதும் நிலைத்திருக்கும்படி இருக்க வேண்டும். மனமோ அல்லது பார்வையோ அலைபாய்ந்தால் கண்களை மூடிக்கொண்டு வேண்டலாம்.

- Advertisement -