இந்த புத்தாண்டு சிறப்பாக இருக்க உங்க ராசிக்கான எளிய பரிகாரம்

1573
Puthandu pariharam
- விளம்பரம் -

மேஷம் :
Mesham Rasi

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீசுப்பிரமணியரை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட, சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம் :
Rishabam Rasi

- Advertisement -

தஞ்சை மாவட்டம் மணலூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரிஅம்மனை ஒரு வெள்ளிக்கிழமையன்று சென்று வழிபடுவதால், நோய்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.

மிதுனம் :
Mithunam Rasi

கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீவரதராஜ பெருமாளை ஒரு சனிக்கிழமையன்று வழிபடுவது நன்மை தரும்.

கடகம் :
Kadagam Rasi

ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை அருள்மிகு முத்துக்குமார சுவாமியை பூசம் நட்சத்திர நாளில் வழிபட்டால், மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்:
simmam

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை ஒரு பிரதோஷ நாளில் வழிபடுவது நன்மை தரும்.

கன்னி:
Kanni Rasi

நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் எழுந்தருளியிருக்கும் பைரவரை அஷ்டமி திதியில் வழிபட்டு வந்தால் நன்மைகள் பெருகும்.

துலாம் :
Thulam Rasi

கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம் :
Virichigam Rasi

சங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.

தனுசு :
Dhanusu Rasi

திருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.

மகரம் :
Magaram rasi

மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.

கும்பம் :
Kumbam Rasi

தர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.

தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம்
Meenam Rasi

தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

Advertisement