2018 புத்தாண்டு ராசி பலன் – கன்னி

astrology-1

கன்னி – உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம் – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்காக தியாகம் செய்பவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால்,தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

பார்வைப் பலன்கள்

புத்தாண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் 2-ம் வீட்டில் நிற்பதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன் -மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சிலருக்கு ஷேர் முலமாகவும் அதிகப் பணம் வரும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். ஆனால் 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும், 3.10.18 முதல் வருடம் முடியும் வரையும் குரு உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சென்று மறைவதால், வேலைகளை போராடித்தான் முடிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது.
astrology-wheel

ஆண்டு முழுவதும் ராசிக்கு 4-ல் சனி தொடர்வதால், தாயின் உடல்நலனில் கவனம் தேவை தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். புறநகர்ப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அடிக்கடி சென்று கண்காணித்து வருவது நல்லது. பண விஷயத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

- Advertisement -

1.1.18 முதல் 13.1.18 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால், தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும்.
astrology wheel

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும் கேதுவும் இணைந்திருப்பதால், மன இறுக்கம் வந்து நீங்கும். மகனின் படிப்பு, உத்தியோகத்துக்காக சிலரது சிபாரிசை நாடுவீர்கள்.

8.2.18 முதல் 2.3.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

புத்தாண்டு முழுவதும் ராகு லாப வீட்டில் தொடர்வதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும். சிலர் சொந்தத் தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், கேது 5-ல் தொடர்வதால், குழப்பம் அதிகரிக்கும். சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
astrology-wheel

வியாபாரிகளே! போட்டிகளைச் சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏற்படும். ஒருவாரம் இருப்பதுபோல் மறுவாரம் இல்லையே என்று கலங்குவீர்கள். வியாபாரத்துக்காகக் கடனுதவி பெறுவதிலும் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உணவு, மருந்து, கட்டுமானப் பொருள்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். வேலையாள்களும் பொறுப் பற்று நடந்துக் கொள்வார்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். ஆனாலும் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் தருவார். புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையைத் திரும்பப் பெறுவீர்கள். சக ஊழியர்களால் சின்னச் சின்ன நெருக்கடிகளைச் சமாளிக்கவேண்டி வரும்.
astrology

மாணவ – மாணவியரே! விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். உயர்கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க கூடுதல் செலவு செய்யவேண்டி வரும்.

கலைத்துறையினரே! வீண் வதந்திகள் விலகும். கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு அதிக செலவுகளையும் கடின உழைப்பையும் ஏற்படுத்தினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.
astrology
பரிகாரம்:

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளையும், கருடாழ்வாரையும் ஏகாதசி நாளில் துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.

கன்னி ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Kanni is explained above in detail. In this year your thinking process will get improved.

You should think twice before start doing anything. you should learn to decrease your expense. You will get some thoughts to save money. judgement for pending case will be favour for you. Father health condition will get improved.