2018 புத்தாண்டு ராசி பலன் – ரிஷபம்

Astrology

ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம் – 2018 ராசி பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உழைப்பால் உயர நினைப்பவர்களே!

உங்கள் சப்தமாதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.

பார்வைப் பலன்கள்:

புதன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

உங்கள் ராசியிலேயே புத்தாண்டு பிறப்பதால், பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். உடல் உஷ்ணத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

- Advertisement -

astrology-wheel

வருடம் முழுவது ராகு 3-ல் தொடர்வதால், மனதில் தைரியம் அதிகரிக்கும். சுயமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெரிய பொறுப்புகளில் இருக்கும் பழைய நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கும். இளைய சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கடன்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பிறக்கும். ஆனால், கேது 9-ல் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். நீண்ட கால பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் சுக்கிரன் சூரியன் மற்றும் சனியுடன் சேர்ந்து 8-ல் இருப்பதால், வீண் அலைச்சல்கள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.

மின்சார, மின்னணு சாதனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

1.01.18 முதல் 13.1.18 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால், வீண்பழி ஏற்படக்கூடும். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். 10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால், இக்காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படக்கூடும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் தந்தை வழி சொத்துகளில் சிக்கல்கள் ஏற்படலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் அதிகரிக்கும்.
astrology wheel

30.8.18 முதல் 28.12.18 வரை சுக்கிரன் 6-ல் சென்று மறைவதால், சிறுசிறு விபத்துகள், வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வதால், கூடுமானவரை குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. முக்கிய ஆவணங்களில் கையெழுத்துப் போடும் முன்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்பது அவசியம்.வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். நீண்டகாலமாக உங்களுடன் பழகியவர்கள்கூட உங்களை விட்டுப் பிரியக்கூடும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 2.10.18 வரை குருபகவான் 6-ல் மறைந்து சகட குருவாக இருப்பதால், ஒரே நாளில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். எதைச் செய்தாலும் தோல்வியில் முடிவதாக ஆதங்கப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், அனுசரித்துச் செல்வது நல்லது.ஹார்மோன் பிரச்னை, தைராய்டு, தோலில் நமைச்சல் ஏற்பட்டு நீங்கும். ஆனால், 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.18 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வருமானம் உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்க வழி பிறக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
astrology-wheel

வியாபாரிகளே! புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி வேலையாள்கள் விடுப்பில் செல்வதால், பரபரப்பாகச் செயல்படவேண்டிய நிலை ஏற்படும். டெண்டர்கள் மற்றும் அரசாங்க விஷயங்களில் பல முறை யோசித்து முடிவெடுக்கவும்.பழைய பாக்கிகளைப் போராடித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும். கமிஷன், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

உத்தியோகத்தில் உத்தியோக ஸ்தானாதிபதி சனி 8-ல் இருப்பதால், எதிலும் ஸ்திரமற்ற நிலையே காணப்படும். வேலை விஷயத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். சக ஊழியர்களின் விஷயத்தில் கண்டும் காணாததும் போல் இருப்பது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு உத்தியோகம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும். நியாயமான சலுகைகளைக் கூட போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.
astrology

மாணவ மாணவியர்களே! படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். கூடுமானவரை விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.

கலைத்துறையினரே! சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிசுகிசுத் தொல்லைகள் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

இந்தப் புத்தாண்டு பல சோதனைகளைத் தந்தாலும் திட்டமிட்டுச் செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமையும்.
astrology

பரிகாரம்:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு காட்டழகிய சிங்கர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாட்டழகிய சிங்கப் பெருமாளை (லட்சுமி நரசிம்மரை) சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

மற்ற ராசிக்கான பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

English Overview

2018 new year Rasi Palan in Tamil for Rishabam is explained above in detail. In general Rishaba rasi people will have strength to face any problem this year.

Rishaba rasi people will get benefits from higher officials in 2018. You will get help from your brother and bonding between you and your brother will get strong. you will get costly electronic items. It will get profits in real estate field.