2019 ஆம் ஆண்டில் இந்த ராசிகளுக்கெல்லாம் யோகம் தான் தெரியுமா ?

astro

ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறக்கும் போது, அந்த ஆண்டு நமக்கு எப்படிப்பட்ட ஆண்டாக அமையும் என்கிற வினா நம் அனைவரின் மனத்திலும் எழும். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் புதிய ஆண்டான 2019 ஆம் ஆண்டு பிறக்க போகிறது. ஜோதிட ரீதியில் பார்க்கும் போது பிறக்கின்ற ஆங்கில புத்தாண்டு 12 ராசிகளுக்கும் சராசரியான பலன்களை தருகிறது என்றாலும், “கன்னி, விருச்சிகம் தனுசு” ஆகிய மூன்று ராசிகளுக்கு மட்டும் மிகுந்த நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரும் ஆண்டாக அமைய போகிறது. இந்த மூன்று ராசிகளுக்குமான பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி

Kanni Rasi

ஜாதக கட்டத்தில் 6 வதாக வரும் ராசி கன்னி ராசியாகும். நவகிரகங்களில் புதன் பகவானுக்குரிய ராசியாக கன்னி ராசி இருக்கிறது. கன்னி ராசிகாரர்களுக்கு பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு மிகுந்த அதிர்ஷ்டங்களை தரும் ஒரு ஆண்டாக அமைய போகிறது. இந்த ஆண்டின் 12 மாதமும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் மாதங்களாக அமைய போகிறது. உங்களது வாழ்வில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். ஆனால் முதல் ஒரு மாத காலம் மட்டும் கொஞ்சம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். உங்களது வலிமை, விடா முயற்சி, உறுதி ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பிறரின் பாராட்டுதல்களுக்கு ஆளாவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்க பெறலாம். விரும்பிய ஊருக்கு பணிமாறுதல்களும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வகையான வேலை கிடைக்க சாத்தியங்கள் அதிகமுண்டு. தொழில், வியாபாரங்களில் சிறந்த முன்னேற்றங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத ஆண்டாக அமையப் போகிறது. காதல் விடயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரம், தொழில், வேலை ஆகியவற்றில் கடின உழைப்பு தேவைப்படும். உங்களது கடின உழைப்பிற்கு ஆண்டின் இறுதியில் நல்ல பலன் கிடைக்கும். புதன் கிழமைகளில் பெருமாளை வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்

ஜாதக கட்டத்தில் 8 ஆவதாக வரும் ராசி விருச்சிகம் ராசியாகும். இந்த விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். பிறக்கின்ற 2019 ம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவுகள் வழியிலும் மற்றும் தொழில், வியாபாரங்கள் ஆகியவற்றிலும் ஒரு திருப்திகரமான ஆண்டாக அமையப் போகிறது. உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அது, இந்த ஆண்டு உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு புதிய சொத்துகள் சேரும் யோகம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

- Advertisement -

உங்களின் உடல் ஆரோக்கிய நிலை சிறப்பாக இருக்கும். வீண் விரயங்கள் அதிகம் ஏற்படாது. மாணவர்கள் கல்வி, கலைகளில் சாதனைகள் செய்து, பதக்கங்களையும் புகழையும் பெறுவார்கள். பெண்களுக்கு புத்தாடைகள், ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு புண்ணியத்தை பெறுவீர்கள். ஆக மொத்தம் இந்த ஆண்டு ஒரு மாயாஜாலமான ஆண்டாக உங்களுக்கு இருக்கப்போகிறது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். செவ்வாய்கிழமைகளில் முருகனை வணங்கி வாருங்கள்.

தனுசு

dhanusu

ஜாதகத்தில் 9 ஆவதாக வரும் ராசி தனுசு ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார்.
நேர்மையான குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து ஒரு புதிய வாழ்க்கை ஏற்பட போகிறது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்கான கிரகம் சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும் குழந்தை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய இடத்திற்கு இடமாற்றம் செல்லலாம்.

தொழில், வியாபாரங்களில் இருந்து வந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு மிகுந்த செல்வமும், புகழும் உண்டாகும். புதிய வீட்டு மனை, புதிய வாகனங்கள் போன்றவற்றை வாங்குவீர்கள். பெண்கள் வழியில் சிலருக்கு மிகுந்த பொருள் வரவு உண்டாகும். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் ஆண்டாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
2019 ஆம் ஆண்டு ராசி பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 2019 year lucky rasi palan in Tamil. It is also called 2019 jothida palangal Tamil or 2019 new year palangal Tamil or 2019 aandu palan Tamil or 2019 angila puthandu palangal in Tamil.