2020 புத்தாண்டு பலன்கள் – மீனம்

2020 New year rasi palan Meenam

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மீனம் நண்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு ஆரம்பமே அமோகம் தான். சனி பகவான் உங்கள் ராசிக்கு 10லிருந்து 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அதுமட்டுமல்லாமல் 10ல் உள்ள குரு உங்களுக்கு பதவி உயர்வினை தருவார். உங்களுக்கே தெரியாத உங்களால் நம்ப முடியாத திறமைகள் உங்களிடமிருந்து வெளிவரும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கை தரம் உயரும். உங்களுக்கான மரியாதை உயரும். ராகு உங்கள் 4ம் இடத்தில் இருந்துகொண்டு சங்கடத்தை கொடுத்தார். கேது 10ம் இடத்தில் இருந்து உங்கள் அலுவலகத்தில் சங்கடங்களை கொடுத்தார். இந்த வருடம் ராகு 3லும் கேது 9-ம் இடம் பெயர்ந்து உங்களுக்கான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகிறார்கள். சனி பகவான், குரு பகவான், ராகு, கேது எல்லாம் சரியான இடத்தில் அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சில சங்கடங்கள் இருக்கும். உங்கள் குழந்தைகளிடத்தில் கவனிப்பு தேவை. நிறைய சந்தோஷமும் சில சங்கடங்கள் மட்டுமே இந்த வருடம் உங்களுக்கு இருக்கும்.

Pisces zodiac sign

மாணவர்கள்:

படிப்பில் முன்னேற்றம் இருந்தாலும், சில குழப்பங்கள் உங்கள் மனதில் இருந்து வரும். உடலில் சோம்பல் உண்டாகும். சோம்பலைத் தவிர்த்து படிப்பதின் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். உடம்பில் ஏதாவது ஒரு பிரச்சினை இருப்பது போன்ற பிரம்மை ஏற்படும். அதனை தவிர்த்து சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடைபெறும். அதற்கான சுபச் செலவுகளும் அதிகமாக வரும்.

திருமணம்:

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். மனதிற்கு பிடித்தமான வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்திருக்க கூடிய வருடமாக இது அமையும்.

- Advertisement -

meenam-rasi

வேலை தேடுபவர்களுக்கு:

பத்தாமிடத்தில் குரு இருந்து நீங்கள் நினைத்த வேலையை தேடி தருவார். நீங்கள் நினைத்த ஊதியத்தில், நினைத்த பதவியில் உங்கள் மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். இரண்டாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை.

சொந்தத் தொழில்:

சொந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த கூடிய நேரம் வந்து விட்டது. லாபஸ்தானத்தில் சனி இருக்கும் போதே உங்கள் வருமானத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இனிவரும் லாபத்தினை வீடு, மனைகளில் முதலீடு செய்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். அதிக கடன் வாங்கி முதலீடு செய்யாமல் தொழிலை விரிவு படுத்துவது நல்லது. இப்பொழுது வாங்கும் கடனை பிற்காலத்தில் உங்களால் திருப்பி தர இயலாது.

astro

வேலைக்கு செல்பவர்களுக்கு:

உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடி வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, எல்லாம் தேடி வரும். உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது என்ற தலை கணத்தில், நீங்கள் அடுத்தவரை ஏளனம் செய்யாதீர்கள். அது பிரச்சினையில் போய் முடியும். வேலை சுமை குறையும்.

குலதெய்வ வழிபாடு அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை மாவு, வெல்லம் இவற்றை கலந்து பசுவிற்கு தந்து வந்தால் உங்களுக்கான கஷ்டங்கள் குறையும்.

இதையும் படிக்கலாமே
2020 புத்தாண்டு பலன்கள் – கும்பம்

English Overview:
Here we have Meena rasi 2020 new year rasi palan in Tamil. Puthandu palangal 2020 Meenam is here.