மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்பு, ஒன்றுக்கு பலமுறை யோசித்துக் கொள்ளவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரியான நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும். நிம்மதி கிடைக்கும். எதிரி தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொத்து பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கடன் சுமை குறையும். வீண் விரைய செலவுகளை தவிர்த்து விடுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். கூடுமானவரை அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். உங்களுடைய உடைமைகளை மட்டும் கூடுதல் பொறுப்போடு பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் இருக்கும் சின்ன சின்ன பொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். இறை வழிபாடு செய்யுங்கள். கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை துவங்குவீர்கள். வேலையில் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். உங்களால் வந்த பிரச்சனைகளுக்கு உங்கள் மூலமாகவே ஒரு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த கடன் பிரச்சனைகள் சரியாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த காதல் வெளிப்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுக்காக சில பேர் கடன் வாங்கு வேண்டிய சூழ்நிலைக்கு ஆளவீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். மற்றபடி இந்த நாள் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் நன்மைகள் நடக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். சொத்து சுகம், வண்டி வாங்க கூடிய யோகம் கைக்கூடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல்கள் வரும். மனக்கவலை உண்டாகும். உறவுகளுக்குள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மன கசப்பு உண்டாகும். ஆழ்ந்த சிந்தனை உங்களுடைய வேலையையும் வியாபாரத்தையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு கவனத்தோடு பேச வேண்டும். எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசாதீர்கள். யாரையும் நம்பி, எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களுடைய நலனில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். இன்று கொஞ்சம் சுய நலமாகவே செயல்படுவது நல்லது. எந்த விஷயத்திலும் இன்று சின்னதாக ஒரு சந்தேக பார்வை இருக்கட்டும்.