2023 புத்தாண்டில் நீங்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 10 தீர்மானங்கள்(resolutions) என்னென்ன தெரியுமா? இதெல்லாம் உங்களுக்கும் தோன்றுகிறதா?

murugan-2023
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் பொழுது புதிய தீர்மானங்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இனி இந்த தவறுகளை நாம் செய்யக்கூடாது, இனி இந்த தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும், புதிய ஆண்டு முதல் இந்த விஷயங்களை எல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும், நாம் இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏராளமான கனவுகளுடன் துவங்கும் இந்த புதிய ஆண்டில் நீங்கள் தவறாமல் எடுக்க வேண்டிய இந்த 10 தீர்மானங்கள் என்னவென்று? தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படிக்கலாமே!

ரெசல்யூஷன் 1:
எல்லோருக்குமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்று தோன்றினாலும் அதற்கான நேரம் என்பது கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த புதிய ஆண்டு முதல் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு என்று சிறிது நேரத்தை செலவிட திட்டமிடுவது அவசியம் ஆகும்.

- Advertisement -

ரெசல்யூசன் 2:
நவ நாகரிக உலகில் அனைவரின் மீதும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய காலத்தை சற்று ஆசுவாசப்படுத்தி நமக்காக வாழ்பவர்கள், நம்மை சுற்றி இருப்பவர்கள் போன்றவர்களையும் சிறிது நேரம் ஆவது கண் கொண்டு பார்த்து, பேசி உறவை மேம்படுத்திக் கொள்ள திட்டமிட வேண்டும்.

ரெசல்யூஷன் 3:
ஆண்டு முழுவதும் நம்முடைய நினைவுகளை மறக்காமல் இருக்கவும், தொலைக்காமல் இருக்கவும் புதிய ஆண்டில் அதை எவ்வகையில் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வகையில் எல்லாம் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். மறக்காமல் புதிய ஆண்டில் உங்களுடைய நினைவுகளை சேமித்து வையுங்கள், அடுத்த ஆண்டில் அது உங்களை கண்கலங்க செய்யும்.

- Advertisement -

ரெசல்யூசன் 4:
முக்கிய நபர்களின் பிறந்த தேதி, திருமண தேதி அவர்களுடைய முக்கியமான நாட்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல தவறாமல் இருப்பதற்கு முன்கூட்டியே அலாரம் போல உங்களுடைய மொபைல் போனில் செட் பண்ணிக் கொள்ளலாம். இதனால் உறவுகள் தானாகவே மேம்பட துவங்கும்.

ரெசல்யூஷன் 5:
புத்தாண்டில் நீங்கள் புதிதாக உணர்வதற்கு அதற்கு முந்தைய நாளே வீடு முழுவதையும் சுத்தம் செய்வது, தேவையற்ற குப்பைகளை வெளியில் தூக்கி எறிந்து விட்டு உங்களுக்கு மனம் கவரும் சில வீட்டு பொருட்களை வாங்கி வைத்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க துவங்கும். புதிதாக வாழ்வது போன்ற ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

- Advertisement -

ரெசல்யூசன் 6:
இதுவரை நீங்கள் பணத்தை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி இருக்கலாம் ஆனால் புத்தம் புதிய ஆண்டில் பணத்தை சேகரிக்க முயற்சி செய்யுங்கள். ஆண்டின் இறுதியில் குடும்பத்துடன் ஏதாவது ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வாருங்கள், இது அடுத்த ஆண்டு துவக்கத்தையும் சேர்த்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும்.

ரெசல்யூசன் 7:
பலரும் புதிய ஆண்டில் புதிய டைரி ஒன்றை வாங்கி அதில் குறிப்புகளையும், அன்றைய நாள் நிகழ்வுகளையும் குறித்து வைப்பது வழக்கம். அது போல நீங்களும் இந்த புதிய ஆண்டில் ஒரு டைரி அல்லது நோட்டுப் புத்தகத்தை வாங்கி அனுதினமும் நடக்கும் முக்கிய விஷயங்களை குறித்து வைத்துக் கொண்டால் பல இடங்களில் அது பேருதவியாக உங்களுக்கு இருக்கும்.

ரெசல்யூசன் 8:
இந்த அவசரமான உலகில் வீட்டில் இருக்கக்கூடிய வயது முதிர்ந்த நம்முடைய தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா போன்றவர்களை கவனிக்க மறந்து விடுகிறோம். அவர்களுடன் சிறிது நேரம் ஆவது வாரம் ஒருமுறை அமர்ந்து பேசி அவர்களுடைய அனுபவங்களை நாம் கேட்டு தெரிந்து கொண்டால் அது நம்முடைய வாழ்க்கைக்கு பக்க பலமாக அமையும்.

ரெசல்யூசன் 9:
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு செடியையாவது நட்டு வைத்து வளர்க்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் இந்த புதிய ஆண்டில் உங்களால் முடிந்த அளவிற்கு உங்கள் வீட்டில் அல்லது உங்களை சுற்றி இருக்கும் இடங்களிலோ மரம், செடிகளை நட்டு வைத்து வளர்க்க பாருங்கள்.

ரெசல்யூஷன் 10:
வரவு, செலவு கணக்கை பார்ப்பது என்பது ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதுவரை நீங்கள் கண் முன் தெரியாமல் செலவு செய்திருந்தாலும், இந்த புதிய ஆண்டின் துவக்கத்தில் இருந்து நீங்கள் சம்பாதிக்கும் உங்களுடைய உழைப்பு பணத்தை எந்த வகையில் எல்லாம் செலவழிக்கிறீர்கள்? என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களை மென்மேலும் சம்பாதிக்கவும், சம்பாதித்த பணத்தை வீணாக செலவு செய்யக்கூடாது என்பதையும், பயனுள்ள வகையில் சேகரிக்க வேண்டும் என்கிற உணர்வையும் கொடுக்கும்.

- Advertisement -