இல்லத்தரசிகளுக்கு பயன்படும் 5 வீட்டு குறிப்புகள்.

kadugu
- Advertisement -

வீட்டிற்கும் சமையலறைக்கும் தேவையான புத்தம் புது குறிப்புகள் இந்த பதிவில் இல்லத்தரசிகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தேவை என்பவர்கள் இதை படித்து பலனடையலாம். இந்த குறிப்புகளை எல்லாம் பின்பற்றி வீட்டு வேலைகளை செய்யும் போது, வேலையும் சுலபமாகும். அதே சமயம் ஆரோக்கியமும் கிடைக்கும். வாங்கி வைத்த சமையல் பொருட்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

குறிப்பு 1

கடுகில் கம்ஃபோர்ட் ஊற்றினால் என்ன நடக்கும். உங்க வீட்டில் நீங்க கருப்பு கடுகு பயன்படுத்தினாலும் சரி, அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் கடுகு பயன்படுத்தினாலும் சரி, அந்த கடுகை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் கடுகு அரை பட்டுவிடும். இதிலிருந்து நல்ல நறுமணம் வெளிவரும்.

- Advertisement -

ரொம்ப நைசா அரைக்க வேண்டாம் கொஞ்சம் கொரகொரப்பாக அரைச்சுக்கோங்க. ஒரு சின்ன பிளாஸ்டிக் கப்பில், இந்த அரைத்த கடுகு 4 ஸ்பூன் போடுங்க. இதில் ஆப்ப சோடா 2 ஸ்பூன் போட்டு, நன்றாக கலந்து விடுங்கள். கூடவே வாசனை திரவியம் சேர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சென்ட் அல்லது துணிக்கு போடும் கம்ஃபோர்ட் எதுவாக இருந்தாலும் ஒரு மூடி இதில் ஊற்றி, இதன் மேலே ஒரு மெல்லிசான பேப்பரை போட்டு, ரப்பர் பேண்ட் போட்டுருங்க.

இந்த பேப்பருக்கு மேலே சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு விட்டால் இதிலிருந்து லேசான வாசம் வெளிவந்து கொண்டே இருக்கும். இந்த கப்பை அப்படியே பாத்ரூமில் வைத்தால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. கொசுத்தொல்லை இருக்காது. இந்த வாசம் கிருமி நாசினியாகவும் செயல்படும். கெட்ட கிருமிகளை அழிக்க கூடிய சக்தி கடுகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல இரண்டு மூன்று கப்பை தயார் செய்து உங்க வீட்டு வாஷ்பேஷன் பக்கத்தில், சிங்குக்கு பக்கத்தில் வைத்தாலும் அந்த இடம் நறுமணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பு 2


மாலை நேரத்தில் எல்லோர் வீட்டிலும் ஊதுபத்தி ஏற்றக்கூடிய வழக்கம் இருக்கும். இந்த ஊதுவத்திக்கு மேலே கொஞ்சமாக வேஸ்லின் தடவி விடுங்கள். பிறகு அந்த ஊதுவத்தியை பொருத்தி வைத்தால் ஊதுபத்தி நீண்ட நேரம் நின்று எரியும்.

குறிப்பு 3


நாம எல்லாருக்குமே அலுமினிய ஃபாயில் பேப்பர் தெரியும். இப்போது எல்லோர் வீடுகளிலும் இந்த ஃபாயில் பேப்பர் இருக்கிறது. சில்வர் கலரில் பிரியாணி எல்லாம் கட்டி தருவாங்க, சில ஹோட்டல்களில் சப்பாத்தி சுருட்டி தருவாங்க பாருங்க. அதுதான் அலுமினிய ஃபாயில் பேப்பர். கருவேப்பிலைகளை வாங்கி வந்து அதை உருவக் கூடாது. அந்த தண்டுகளோடு இருக்க வேண்டும் சின்ன சின்ன தண்டுகளோடு இருக்கும் கருவேப்பிலைகளை இந்த ஃபாயில் பேப்பரில் வைத்து சுருட்டி அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 6 மாதமானாலும் கருவேப்பிலை வாடி போகாது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு பயன்படும்.

- Advertisement -

குறிப்பு 4


நிறைய கோதுமை மாவு அரைத்து டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துள்ளீர்களா. அந்த மாவில் கொஞ்சமாக தூள் உப்பு போட்டு, நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு காய்ந்த பூண்டு பல் எடுத்து இந்த கோதுமை மாவின் மேலே தூவி வைத்தால், அந்த கோதுமை மாவு நீண்ட நாட்களுக்கு புழு பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஈரப்பூண்டு போடக்கூடாது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து ஆறு பல் காய்ந்த பூண்டு சேருங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டை விட்டு பல்லியை வெளியேற்ற டிப்ஸ்

குறிப்பு 5


நிறைய முருங்கைக் காய் வாங்கிட்டு வந்துட்டீங்க. மரத்திலிருந்து பரிச்சிக்கிட்டு வந்துட்டீங்க. அதை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் எப்படி ஸ்டோர் செய்வது. முருங்கைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதன் மேலே சமையல் எண்ணெயை தடவி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -