நாளை, வெறும் கையோடு பெருமாளை பார்த்து கையேந்தி, பெருமாளே எனக்கு வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. ஒரு தீர்வை கொடு என்று சொன்னால் கூட போதும். கை நிறைய அவர் வரங்களை வாரி கொடுக்கும் வல்லமை கொண்டவர். பெருமாளுக்கு உகந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி திதியானது நாளைய தினம் வரவிருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், நாளைய தினம் 21-06-2025 சனிக்கிழமையோடு இந்த ஏகாதசி திதி சேர்ந்து வந்திருக்கிறது.
இந்த நாளில் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. ஆகவே உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், தீராத நோய் நொடிக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள், இதுபோல ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், இந்த நாளில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். உடல் உபாதைகளுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கக்கூடிய நட்சத்திரம் இந்த அஸ்வினி நட்சத்திரம். பெருமாளை வேண்டி நாளை வெறும் வயிற்றில் துளசி தீர்த்தத்தை பருகுங்கள்.
எனக்கு இருக்கும் நோய் நொடி தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், உங்களுடைய நோய் நொடி பிரச்சனைகளும் கூடிய விரைவில் படிப்படியாக குறைய துவங்கும். இந்த நாளில் மருந்து சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை மருத்துவரிடம் சென்று கேட்கலாம். பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். இது முதல் ஆன்மீக ரீதியான பரிகாரம்.
தேய்பிறை ஏகாதசி வழிபாடு
பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் நாளைய தினம் பெருமாளை எப்படி வழிபாடு செய்வது? நாளை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பு ஒரு நெய்தீபம் ஏற்றி வையுங்கள். பெருமாள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பது போல உங்களுடைய மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கண்களை மூடி பெருமாள் ஊஞ்சலில் அமர்ந்து அழகாக ஆடிக் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை என்று கைப்பேசியில், யூடியூபில் போட்டால் கூட வரும். அந்த ஊஞ்சல் சேவையை பார்த்துக்கொண்டே “ஓம் தாமோதராய நமஹ ! ஓம் தாமோதராய நமஹ ! ஓம் தாமோதராய நமஹ ! என்ற மந்திரத்தை மனதார சொல்லி இரண்டு கைகளிலும் துளசி இலைகளை ஏந்தி அந்த துளசி இலைகளை பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: வீட்டில் பீரோ வைக்கும் முறை
உங்கள் கை நிறைய செல்வ வளம் செல்வக் கடாட்சம் கொழிக்க துவங்கிவிடும். மனக்குழப்பம் தீரும். மன சஞ்சலம் தீரும். உங்கள் வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக செல்லும். நாளைய தினம் அதிசக்தி வாய்ந்த சனிக்கிழமை சேர்ந்து வரக்கூடிய இந்த ஏகாதசியை யாரும் தவறவிடாதிங்க. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அந்த பெருமாளை நேரில் வந்து உங்களுக்காக சொன்னதாக நினைத்துக் கொண்டு மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.