- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval21 நாளில் பலன் கிடைக்க மகா சிவராத்திரி வழிபாடு

21 நாளில் பலன் கிடைக்க மகா சிவராத்திரி வழிபாடு

- Advertisement -

நாளை 26-2-2025 புதன்கிழமையோடு சேர்ந்து மகா சிவராத்திரி ஆனது வரவிருக்கிறது. எல்லோரும் நாளை ஈசனை வழிபட ஆர்வமாக இருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் இரவு கண் விழித்து ஈசனை வழிபாடு செய்து செய்து, பாவங்களை எல்லாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இனி வரக்கூடிய காலகட்டத்தில் அந்த ஈசனின் அருளால் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்த சிவராத்திரியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் செய்த பாவங்களுக்கான மன்னிப்பு கிடைக்கும். அனைவருக்கும் ஈசனின் தரிசனம் கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணிப்போம்.

சிவராத்திரி அன்று செய்ய வேண்டிய பூஜை

நாளை எல்லோரும் சிவன் கோவிலுக்கு சென்று கண் விழிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. சில பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். சில பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்காது. இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே நாம் சிவனை வழிபாடு செய்யலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் சிவலிங்கம் இருந்தால் அதற்கு உங்கள் கையாலேயே வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

- Advertisement -

பூஜை அறையில் சிவலிங்கம் இல்லை என்ன செய்வது. உங்கள் கையாலேயே மஞ்சளால் ஒரு சிவலிங்கத்தை பிடித்துக் கொள்ளுங்கள். விபூதியால் சிவலிங்கம் பிடிக்க முடியும் என்றால் இன்னும் சிறப்பு. பிடித்து வைக்கலாம். கொஞ்சம் வில்வ இலைகளை எடுத்து உங்கள் கையாலேயே “சிவ சிவ” நாமத்தை சொல்லி அந்த மஞ்சள் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். எந்த வேண்டுதலை வைத்து இந்த வில்வ இலைகளை எடுத்து, அந்த சிவலிங்கத்திற்கு போட்டு நீங்கள் அர்ச்சனை செய்கிறீர்களோ, அந்த வேண்டுதல் 21 நாட்களில் பலிக்கும் என்பது நம்பிக்கை.

வில்வ இலைகளை மட்டும் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நாளை சிவராத்திரி என்பதால் எல்லா இடங்களிலும் இந்த வில்வ இலை 20 ரூபாய்க்கு கூட கட்டாயம் கிடைக்கும். இந்த வழிபாட்டை நாளைய தினம் எந்த நேரத்தில் செய்வது? முடிந்தவர்கள் சிவராத்திரி இரவு, அதாவது புதன்கிழமை இரவு 12:15 மணி முதல் இரவு 12:45 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். ரொம்ப ரொம்ப நல்லது. இந்த நேரத்தில் வழிபட முடியாது என்பவர்கள் சிவராத்திரி அன்று எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் சிவனை பூஜிகலாம் தவறு கிடையாது. கேட்ட வரம் அப்படியே சிவனிடம் கிடைக்கும்.

- Advertisement -

பொதுவாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். மற்ற மந்திரங்களை எல்லாம் தவறாக உச்சரித்தால் அதற்கு உண்டான கெடுபலன்கள் நமக்கு கிடைக்கும். இந்த சிவ மந்திரத்தை மட்டும் எப்படி சொன்னாலும் சிவபெருமான் நமக்கு நல்லது தான் செய்வாராம். அதனால் தான் சிவ சிவ மந்திரத்தை யார் வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

“சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய” இதனால் தான் சிவாய நம என்ற மந்திரத்தை இப்படி மாற்றி மாற்றி எழுத்துக்களை போட்டு கூட சொல்லுவார்கள். இந்த மந்திரத்தை நாளைய தினம் உச்சரித்தாலும் கோடி புண்ணியம் தான். சிவ சிவ நாமத்தை உங்கள் மனதிற்குள் நாளை முழுவதும் சொல்லிக் கொண்டே இருங்கள். சிவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

உங்கள் கையாலேயே வில்வ இலையை லிங்கத்திற்கு போடும் பாக்கியம் கிடைத்தால் இன்னும் சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு உங்கள் கையால் வில்வ இலை வாங்கிக் கொடுங்கள். வீட்டிலேயே சிவலிங்கம் இருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: மகா சிவராத்திரி விரத முறை 2025

சிவனின் திருவுருவப்படம் இருந்தாலும் இந்த அர்ச்சனையை செய்யலாம். சில பேர் வீட்டில் அருணாச்சலேஸ்வரர் படம் இருக்கும். அந்த படத்திற்கும் வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம். நீங்களே ஏதாவது ஒரு வகையில் சிவலிங்கத்தை செய்து வைத்து உங்களுடைய வீட்டில் அந்த ஈசனை பூசிக்கலாம். இப்படி உங்கள் கையால் செய்யப்பட்ட லிங்கத்தை மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீரில் கரைத்து விடலாம் தவறு ஒன்றும் கிடையாது. பலன் உங்களுக்கு அப்படியே கிடைக்கும். அதிலும் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரம் சமர்ப்பணம்.

சற்று முன்