காலத்தே பயிர் செய் என்று சொல்லுவார்கள் நம்முடைய முன்னோர்கள். எந்தெந்த காலத்தில் எந்தெந்த நல்லது நடக்க வேண்டுமோ, அந்தந்த காலத்தில் அந்தந்த நல்லதை செய்து விட வேண்டும். பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் நடக்க வேண்டிய நல்லது, அந்தந்த வயதில் நடந்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக திருமணம்.
இந்த திருமணத்தடை இருக்கக்கூடிய வீடுகளில் பெற்றவர்களுடைய கஷ்டம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். திருமணம் செய்யக்கூடிய காலம் தள்ளிப் போக போக பெற்றவர்களுக்கு மன பாரம் ஏறிக்கொண்டே செல்லும். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் பெற்றவர்களுடைய கஷ்டத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.
உங்களுடைய வீட்டிலும் யாருக்காவது திருமணத்தில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா. இந்த எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான். முருகனை மனதார நினைத்து இந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
திருமணம் நடக்கவில்லை என்றால் ஜாதக கட்டத்தை பார்த்துவிட்டு ஜோதிடர் எத்தனையோ பரிகாரங்களை சொல்லுவார். எத்தனையோ கோவில்களுக்கு சென்று வரச் சொல்லி சொல்லுவார். ஆனால் எல்லோராலும் அந்த பரிகாரங்களை செய்ய முடியாது. எல்லோராலும் அந்த குறிப்பிட்ட கோயிலுக்கு சென்றுவர முடியாது.
அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது பரிகாரம் செய்ய முடியும் என்றால் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப நீங்கள் பரிகாரங்களை செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இருப்பினும் அனைவராலும் செய்யப்படக்கூடிய ஒரு எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் இந்த முருகன் வழிபாடு.
சீக்கிரம் திருமணம் நடக்க முருகன் வழிபாடு
மாதத்தில் 4 நாள் செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, விசாகம், இந்த நான்கு நாட்கள் வரும். இந்த நாட்கள் எல்லாம் எப்போது வருகிறது என்று காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வளர்பிறை தேய்பிறை அதெல்லாம் கணக்கு பார்க்க வேண்டாம். வளர்பிறையில் வரும் சஷ்டி கிருத்திகை விசாகம் நட்சத்திரத்தன்று பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தேய்பிறையில் வரும் இந்த நாட்களிலும் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த நாட்களில் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு 2 நெய் தீபங்கள் மட்டும் ஏற்றி வைத்துவிட்டு, முருகனுக்கு செவ்வரளி பூவால் கட்டப்பட்ட பூமாலையை வாங்கி தர வேண்டும். செவ்வரளி பூக்களை கட்டி ஒரு முழம் இரண்டு முழம் கொடுத்தாலும் தவறு கிடையாது. செவ்வரளியை மாலையாக வாங்கி முருகனுக்கு சாத்தினாலும் தவறு கிடையாது அது உங்கள் வசதியை பொருத்தது.
3 லிருந்து 6 மாதங்கள் முருகப்பெருமானை தொடர்ந்து இந்த முறையில் வழிபாடு செய்துவர ஜாதக கட்டத்தில் எவ்வளவு பெரிய திருமண தடை இருந்தாலும் அது விலகும். யாருக்கு திருமணம் நடக்கவில்லையோ குறிப்பிட்ட நபரின் அந்த கையால் இந்த பூ மாலையை கொண்டு போய் முருகனுக்கு கொடுக்கணும்.
இதையும் படிக்கலாமே: கர்ம வினைகளை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
அப்போதுதான் பரிகாரம் சீக்கிரமாகவே செய்யலாம். திருமண வயதை கடந்து சில பேரு திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள் அப்படி பட்டவர்களுக்கு கூட, உங்களுக்கு ஏற்ற வரனை அந்த முருக பெருமான் காட்டிக் கொடுப்பான். என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.