நம்முடைய கர்ம வினைகள் தொடர்பாக தான் நமக்கு இந்த ஜென்மம் என்பதே உருவானது. இந்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நவகிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் தருகின்றன. அதிலும் குறிப்பாக கர்ம வினைகளின் படி பலனை தரக்கூடியவராக சனீஸ்வர பகவான் திகழ்கிறார். அதனால் தான் சனீஸ்வர பகவானின் பார்வை ஒருவர் மீது பட்டு விட்டால் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று கூறப்படுகிறது. ஏழரை சனி என்று கூறப்படக்கூடிய ஏழரை ஆண்டுகளில் ஒருவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறி வேறொரு பரிமாணத்தில் இருப்பார்கள்.
அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக சனீஸ்வர பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானின் ஆதிக்கத்திலிருந்து விடு பட வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டும். கர்ம வினைகளை குறைப்பதற்கு பலவிதமான வழிபாடுகளும் பரிகாரங்களும் திகழ்கின்றன. அந்த பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது கர்ம வினைகள் குறைவதோடு மட்டுமல்லாமல் சனீஸ்வர பகவானின் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கர்ம வினைகளை நீக்கும் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்க கூடிய கிரகமாக தான் சனீஸ்வர பகவான் திகழ்கிறார். ஆனால் சனீஸ்வர பகவானையே ஆட்டிப்படைத்த தெய்வங்களாக இரண்டே இரண்டு தெய்வங்கள் தான் இருக்கின்றன. அவர்கள் தான் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர். விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் கர்ம வினைகளை தீர்க்கக்கூடிய சக்தி இருக்கிறது. மேலும் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் விலக்க அவர்கள் அருளாசி புரிவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ஆஞ்சநேயர் வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக ஆஞ்சநேயரை வியாழக்கிழமை, சனிக்கிழமை, மூல நட்சத்திரம் போன்ற நாட்களில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். சனீஸ்வர பகவானின் தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக பலரும் சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது ஒரு வழிபாட்டு முறை என்பது இருக்கிறது. அந்த வழிப்பாட்டு முறையை நாம் பின்பற்றினோம் என்றால் நாம் பின்பற்றிய உடனேயே கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும். சனி தோஷமும் விலக ஆரம்பிக்கும். இந்த வழிபாட்டை சனீஸ்வர பகவான் மற்றும் ஆஞ்சநேயர் இருக்கக் கூடிய ஆலயத்தில் தான் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானுக்கு என்று தனி சன்னதி இருக்கக்கூடிய ஆலயத்தில் தான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை அன்று சனீஸ்வர பகவானுக்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு சனீஸ்வர பகவானுக்கு முன்பாக நின்று கொண்டு மனதிற்குள் ஆஞ்சநேயரை நினைத்தவாறு ஆஞ்சநேயரின் நாமத்தையும் மந்திரத்தையும் கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி சனீஸ்வர பகவானுக்கு முன்பாக நின்று ஆஞ்சநேயரை நினைத்து நாம் வழிபாடு செய்ய ஆரம்பித்த உடனேயே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். மேலும் சனீஸ்வர பகவானால் எந்தவித கெடுதல்களும் ஏற்படாது.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி வழிபாட்டு முறைகள்
முழு மனதோடு ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு சனீஸ்வர பகவானால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது மேலும் கர்ம வினைகளும் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.