இந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டால் 21 தலைமுறையாய் தொடர்ந்த பூர்வ ஜென்ம பாவம் தீரும்.

sivan1
- Advertisement -

தெரிந்தே செய்த பாவம், தெரியாமல் செய்த பாவம் என்று இரண்டு வகைகள் உண்டு. தெரிந்தே செய்த பாவம் என்ன என்பது நமக்கு தெரியும். இந்த ஜென்மத்தில் இந்த பிறப்பில் நம்மை அறிந்து பிறருக்கு செய்த பாவத்துக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, செய்த பாவத்திற்கு உண்டான பிராயச்சித்தத்தை தேடிக்கொண்டால் அந்த பாவத்திலிருந்து விடுபடலாம்.

தெரியாமல் செய்த பாவம், முற்பிறவியில் செய்த பாவம், நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம், நம் குடும்பத்தை தொடர்ந்து வருகிறது என்றால் அதற்குப் பிராயச்சித்தம் தேடுவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நீங்கள் தெரிந்தே பாவம் செய்திருந்தாலும் சரி அல்லது முற்பிறவி பாவங்கள் உங்களை தொடர்ந்து வந்தாலும் சரி, அதிலிருந்து விடுபட எளிமையான ஆன்மீகம் சொல்லும் சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பல தலைமுறையாக தொடரும் பாவம் தீர செய்ய வேண்டிய பரிகாரம்

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலமாக நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைய தொடங்கும். ஒரு நாள் இதை செய்துவிட்டு அப்படியே விடக்கூடாது. உங்கள் வாழ்நாள் முழுவதும் வாயில்லா ஜீவன்களுக்கு உங்கள் கைகளால் சாப்பாட்டு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பச்சரிசி, எள்ளு, திணை இந்த 3 பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கலந்த இந்த கலவையை கோவிலுக்கு செல்லும்போது எடுத்துச் செல்லுங்கள். அங்கு மரத்தடியில் இந்த கலவையை உங்கள் கையால் தூவி விட வேண்டும். அதை எறும்புகளும், சின்ன சின்ன பூச்சிகளும் பசிக்கு சாப்பிட்டு உங்களை மனதார வாழ்த்தும். அதிலேயே பாதி கர்ம வினை தீர்ந்துவிடும்.

- Advertisement -

இதை கோவிலில் இருக்கும் மரத்தடியில் மட்டும் தான் போட வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்கள் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய மரம், ரோட்டோரங்களில் இருக்கக்கூடிய மரம் செடி கொடிகளுக்கு அடியில் கூட போடலாம். தவறு கிடையாது. அடுத்தபடியாக பசு மாட்டிற்கு உங்கள் கைகளால் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய பொருளை வாங்கி தானம் கொடுக்க வேண்டும்.

அருகம்புல் புல், கீரை, இப்படி பசு மாட்டிற்கு உங்கள் கையால் பசுமையான பொருட்களை வாங்கி சாப்பிட கொடுக்கும் போது, கர்ம வினைகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை உங்களுடைய வாழ்க்கையில் ரெகுலரா செய்ய தொடங்கிட்டா செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இது தவிர இன்னொரு வழிபாடும் உள்ளது.

- Advertisement -

21 தலைமுறை பாவத்தை போக்கும் ஸ்தலம்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 32 கிலோமீட்டர் தொலைவில் அன்னூர் என்ற ஊர் இருக்கிறது. அன்னூரில் பாவிக்கும் சிவபெருமான் கோவிலுக்கு செல்லுங்கள். இத்திருத்தலத்தில் இருக்கும் சிவனை மன்னிஸ்வரர் என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இந்த கோவிலுக்கு சென்று 21 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த ஸ்தலத்தை 21 முறை வளம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

தெரிந்தே செய்த பாவத்திற்கும், தெரியாமல் செய்த பாவத்திற்கும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டு வழிபாட்டை செய்யுங்கள். இந்த வழிபாட்டை ஒரு முறை செய்தாலே 21 ஜென்மம் உங்களை தொடரும் பாவங்கள் தீரும். உங்கள் குடும்பத்தில் முந்தைய தலைமுறையில் வாழ்ந்தவர்கள் செய்த பாவம் ஏதேனும் உங்களைத் தொடர்ந்தால் கூட அந்த பாவம் நிவர்த்தி ஆகும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க ஏழு கிராம்பை வைத்து யாருக்கும் சொல்லாமல் இந்த ரகசிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.

உங்களுடைய பாதங்கள் அந்த கோவிலில் இருக்கும் திருஸ்தளத்தில் பதிந்தாலே உங்களுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம். இத்தனை அற்புதம் வாய்ந்த இத்திருத்தலத்திற்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். கர்ம வினைகள் நீக்கி அனைவரும் வளம்பெற வாழ அந்த எம்பெருமானை வேண்டிக் கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -