- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval22-6-2025 நாளைய தினம் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு

22-6-2025 நாளைய தினம் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் அப்படி என்ன அதி அற்புதமான நாள். நாளை ஞாயிற்றுக்கிழமை கிழமை, நாளை பரணி நட்சத்திரமும் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரமும் இருக்கிறது. இந்த இரண்டு நட்சத்திரமும் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் தான். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நாளை முருகப்பெருமானை வழிபாடு செய்ய, அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது ஜோதிட ரீதியான நம்பிக்கை.

கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம். இந்த இரண்டு நட்சத்திரங்களும் சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த நாளில் முருகப்பெருமான் வழிபாட்டை நாம் தவற விடலாமா. நாளை செய்ய வேண்டிய முருகர் வழிபாடு, சொல்ல வேண்டிய முருகர் மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை இருக்கிறது, நல்ல வேலை கிடைக்கவில்லை, வேலை இருந்தும் வருமானம் இல்லை, தொழிலில் நிறைய பிரச்சனை இருக்கிறது. லாபம் கைக்கு வந்து சேரவில்லை, எவ்வளவு உழைப்பை முதலியராக போட்டாலும், வியாபாரத்தை முன்னேற்ற முடியவில்லை, என்பவர்கள் எல்லாம் நாளைய தினம் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

தொழிலில் வெற்றி பெறவும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையவும், சூரிய பகவானின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்க வேண்டும், சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை அன்று, முருகப்பெருமானை வழிபாடு செய்யும்போது நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்பதுதான் இந்த வழிபாட்டிற்கு பின்னால் மறைந்திருக்கும் நம்பிக்கை.

- Advertisement -

நாளை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று 2 நெய் தீபங்கள் ஏற்றி, 6 செவ்வாழை பழங்களை முருகப்பெருமானுக்கு வாங்கிக் கொடுத்து, அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். “ஓம் கதிர்வேலாய நமஹ” என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே, முருகப்பெருமானை 6 முறை வலம் வர வேண்டும்.

முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுங்கள். வழிபாட்டை நிறைவாக செய்து முடித்துவிட்டு, கோவிலில் இருந்து வாங்கிய அந்த 6 வாழைப்பழங்களையும் கோவிலுக்கு வெளியில் வந்து யாசகம் கேட்பவர்களுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் இந்த வழிபாட்டை நீங்கள் செய்து முடித்தால் நிச்சயமாக உங்கள் வாழ்நாளில் இருக்கும் வருமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். காலை நேரத்தில் இந்த வழிபாட்டை, பரணி நட்சத்திரத்தில் செய்ய முடியவில்லை என்றால் மாலை நேரத்தில் செய்யலாம். மாலை கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது. அதுவும் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் தான்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாதம் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

ஆனால் நீங்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால், இந்த வழிபாட்டை காலை நேரத்தில் செய்வது சிறப்பு. மற்றவர்கள் இந்த வழிபாட்டை மாலை 6:30 மணிக்கு மேல் செய்தாலும் தவறு கிடையாது. அதி சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டில் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொண்டு, இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்