- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval25-03-2025 அபிஜித் நட்சத்திர வழிபாடு

25-03-2025 அபிஜித் நட்சத்திர வழிபாடு

- Advertisement -

நாளை 25-3-2025 அன்று அபிஜித் நட்சத்திர நேரம் ஆனது வரவிருக்கிறது. நாம் அறியாத 28 வது நட்சத்திரம் தான் இந்த அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தை பூலோகத்தில் வசிக்கும் மக்கள் கையில் கொடுத்தால், அவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று கிருஷ்ண பரமாத்மா இதை தன்னுடைய மயில் இறகில் மறைத்து வைத்துள்ளார் என்று சொல்கிறது நம்முடைய இந்து சாஸ்திரம். சரி நாளைய தினம் வந்திருக்கும் அபிஜித் நட்சத்திர நேரத்திற்கு அப்படி என்ன சிறப்பு.

நாளைய தினம், மாத ஏகாதசி திதி இருக்கிறது. நாளைய தினம் செவ்வாய்க்கிழமை, முருகனுக்கு உரிய தினம். அது மட்டுமல்லாமல் இந்த அபிஜித் நட்சத்திர நேரம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வந்திருக்கிறது. இந்த நாளை தவிர விட்டால் இதுபோல இன்னொரு நாள் கிடைக்கவே கிடைக்காது. ஆகவே இந்த நாளையும், இந்த நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நாளில் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான சித்தர் வழிபாட்டை பற்றியும் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சமீபகாலமாக கேளக்கியர் சித்தரை பற்றி நிறைய சமூக ஊடங்களில் நான் கேள்விப்பட்டிருப்போம். உங்களுக்கும் சித்தர் வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால், சித்தர் தரிசனம் பெற ஆசை இருந்தால், இந்த வழிபாட்டை நீங்கள் நாளைய தினம், அபிஜித் நட்சத்திர நேரத்தில் முயற்சி செய்து பார்க்கலாம். சித்தர் தரிசனத்தோடு சேர்த்து, நீங்கள் சிந்திக்காத சில அதிசயங்களும் உங்கள் வாழ்வில் நடக்கும்.

அபிஜித் நட்சத்திர நேரம்:

25-3-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:15 முதல் 4:39 மணி வரை இருக்கிறது. இதில் இன்னொரு அதிசயம் என்ன என்று பார்த்தால் இரண்டு 25, இந்த தேதிக்குள் அடங்கி இருக்கிறது. குறிப்பிட்ட இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுக் கொள்ளலாம். வரவேற்பறையில் அமர்ந்து இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். பூஜை அறையிலும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவையோ, அந்த ஒரு கோரிக்கையை இந்த பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும். “ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ !” என்ற இந்த மந்திரத்தை அந்த அபிஜித் நட்சத்திரம் நேரம் முழுவதும் சொல்லுங்கள். அந்த 24 நிமிடம் முழுவதும் இந்த ஒரு மந்திரத்தை சொல்லி சித்தரை அழைத்து, உங்களுடைய கோரிக்கையை வைக்கும் போது, சித்தருடைய தரிசனம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கேளக்கியர் நிச்சயம் காட்சி கொடுப்பார். உங்களுக்கான வரங்களையும் வாரி வழங்கி விடுவார். இது அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்ய வேண்டிய சித்தர் வழிபாடு.

இதையும் படிக்கலாமே: சுக்ர அருள் பரிபூரணமாக கிடைக்க

உங்களுக்கு கிருஷ்ண பரமாத்மா மீது பக்தி இருக்கிறது என்றால், கிருஷ்ண பரமாத்மாவை வேண்டியும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அபிஜித் நட்சத்திரம் என்றால், அது கிருஷ்ணா பரமாத்மாவுக்கு உரிய நேரம்தான். இருந்தாலும் அந்த நேரத்தில் சித்தர் வழிபாடு செய்வதில் தவறு கிடையாது என்பதற்காக இந்த புது வழிபாடு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாடுகளை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்