திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார். மாணிக்கவாசகர் அவர்கள் எம்பெருமானை பற்றி உள்ளம் உருகி உருகி எழுதிய பாடல் வரிகள் தான் திருவாசகம். மாணிக்கவாசகர், நடராஜ ரூபத்தில் இருக்கும் ஈசனோடு ஐக்கியமான நாளை தான், மாணிக்கவாசகர் குருபூஜையாக கொண்டாடி வருகின்றோம். ஆனி மாதம் வரவிருக்கும் மகம் நட்சத்திரத்தில் தான் இந்த மாணிக்கவாசகர் குருபூஜையானது கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் இந்த குருபூஜை கோலாகலமாக நடைபெறும். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய சிவன் ஆலயங்களில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தால் அதில் நீங்களும் சென்று கலந்து கொள்ளுங்கள். அங்கு திருவாசகம் படிப்பார்கள். அதை உங்கள் காதால் கேட்டாலே பெரும் பாக்கியம். பெரும் புண்ணியம்.
சிவன் பாதத்தில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும். சிவனை வழிபாடு செய்து சிவனோடு ஐக்கியம் ஆவதற்கு ஒரு வாய்ப்பையும் அந்த திருவாசகம் பாடல் வரிகள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். உத்திரகோசமங்கையில் இந்த மாணிக்கவாசகர் குருபூஜை மிகவும் விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
மாணிக்கவாசகரும் சிவபெருமானும் வேறு வேறு கிடையாதுங்க. சிவனின் அவதாரம் தான் மாணிக்கவாசகர். சிவபெருமானே மனித அவதாரம் எடுத்து பூமியில் பிறந்து, திருவாசகத்தை எழுதியதாக தான் புராணங்கள் சொல்லுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லப் போனால் மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல, திருவாசகத்தை சிவபெருமானே எழுதினார் என்பதும் வரலாற்றில் இடம்பெற்றுள்ள வரிகள். இந்த நாளுக்கு அவ்வளவு சக்தி இருக்கு தவற விட்டிராதீங்க.
வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில்களில் நால்வர் சிலை இருந்தால், அதில் மாணிக்கவாசகர் கட்டாயம் இருப்பார். அந்த கோவில்களில் கட்டாயம் மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெறும். அந்த கோவிலுக்கு கட்டாயமாக சிவனடியார்கள் வருவார்கள். சிவனடியார்களுக்கு செய்யும் தொண்டு அந்த சிவனுக்கே செய்யும் தொண்டு. நாளை சிவனடியார்களுக்கு உங்களால் முடிந்த பசுஞ்சான விபூதியை தானமாக கொடுக்கலாம். நாலு பேருக்கு திருவாசகம் புத்தகத்தை வாங்கி தானமாக கொடுக்கலாம்.
அங்கு வரும் சிவனடியார்களுக்கு ஒரு டம்ளர் மோர் கொடுத்தாலும் அது உங்களுக்கு பெரும் புண்ணியத்தை சேர்க்கும். இது எதுவுமே உங்களுக்கு செய்ய முடியவில்லையா. அந்த சிவன் கோவிலில் அமருங்கள். சில கோவில்களில் சிவபெருமான முற்றோதல் நடைபெறும். திருவாசகத்தை முழுமையாக பாடுவார்கள். கோவிலில் அமைதியாக அமர்ந்து சிவனை மனதில் நினைத்து, அந்த பாடலை காதால் கேட்டாலே உங்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும்.
சிவனின் பாதத்தில் ஒரு இடம் கிடைக்கும். உங்களுக்கும் சிவபுராணம் படிக்க வேண்டும். திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கோவிலில் அமர்ந்து அந்த பாடலை சிவனடியார்களோடு சேர்ந்து பாடலாம். திருவாசகத்தை படித்தால் சில பேருக்கு தங்களை அறியாமலேயே கண்களில் இருந்து தண்ணீர் வரும். ஏன் வருகிறது எதற்கு வருகிறது என்று யாருக்கும் தெரியாது. சிவனை உண்மையாக நம்பி படிப்பவர்களுக்கு திருவாசகத்தினுடைய அருமை பெருமை நிச்சயம் புரிந்து இருக்கும்.
இந்த திருவாசகத்தில் திருபுலம்பல் என்ற தலைப்பில் ஒரு பாடல் வரிகள் உள்ளது. இதில் மாணிக்கவாசகர் என்ன சொல்லி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா. முதலில் அந்த பாடலை பார்த்து விடுவோம்.
திருபுலம்பல்
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
இதையும் படிக்கலாமே: பூர்வீக சொத்து கிடைக்க ஏற்ற வேண்டிய தீபம்
நாமெல்லாம் கடவுளிடம் சென்றால் எதெல்லாம் வேண்டுமோ, இது வேண்டும் அது வேண்டும் பொன் வேண்டும் பொருள் வேண்டும் என்று தான் கேட்போம். ஆனால் மாணிக்கவாசகரோ எனக்கு ஒரு ஊர் உறவு படிப்பு பொன் பொருள் எதுவுமே எனக்கு வேண்டாம். உன்னுடைய பாதத்தில், உன்னுடைய நிழலில் எனக்கு ஒரு சின்ன இடம் கிடைத்தால் போதும் என்று ஈசனை வேண்டிய பாடி பாடல் தான் இது. நீங்களும் இந்த பாடலை பாடி மாணிக்கவாசகர் குரு பூஜை அன்று ஈசனை, மாணிக்கவாசகரை வழிபாடு செய்ய வேண்டியதெல்லாம் கிடைக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.