இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் கூட போதும். கணவன் மனைவிக்குள் ஆயுசு முழுக்க பிரச்சினை வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

Temple

தற்போதைய வாழ்க்கை சூழலில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையானது அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. மனைவி கணவனை புரிந்து நடந்துகொள்ளாமல் இருப்பது அல்லது கணவன் மனைவியை புரிந்து நடந்துகொள்ளாமல் இருப்பது, சந்தேகத்தினால் ஏற்படும் பிரச்சனை, வேலை சுமையால் ஏற்படும் தொல்லைகளை வீட்டில் காட்டுவது, தன்னை மீறிய கோவம், இப்படி கணவன் மனைவி பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதற்கான தீர்வாக சில வழிபாடு முறைகள் உள்ளது. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

temple

முதலாவதாக, திருவாரூர் மாவட்ட்டம் ஸ்ரீவாஞ்சியம் என்னும் ஊரில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டோமானால் கணவன் மனைவி பிரச்சனை தீரும். மகாலட்சுமி தன்னிடம் எப்போதும் வாஞ்சையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக திருமால் சிவனிடம் வரம் பெற்ற திருத்தலம் இது. அப்படிபட்ட திருத்தலத்தில் நாமும் சென்று மனமுருகி வழிபாடு செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையேயான அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற தலமான இது “காசியைவிட வீசம் அதிகம்” என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் கணவன் மனைவி பிரச்சனைகள் நீங்கும். அன்னையும் அப்பனும் ஒன்றாக இனைந்து அர்த்தநாரீசுவரராக காட்சி தரும் இந்த தலத்தில் தான் அன்னை மரகத லிங்கத்தைப் பூசித்து இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இப்படி அன்னையும் அப்பனும் கலந்த இந்த தலத்தில் வழிபட்டால் நிச்சயம் கணவன் மனைவிக்கு இடையேயான ஒற்றுமை ஓங்கும். தேவாரம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பலவற்றில் இந்த தலம் குறித்த குறிப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Arthanareswarar

உற்றார் உறவினர்கள் மூலமாக சில சமயம் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் வரும். அல்லது உற்றார் உணவினர்களோடு நமக்கு பிரச்சனை இருக்கும். இது போன்ற சமயத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலைக்கு சென்று முருகப்பெருமானை மனமுருகி பிராத்தனை செய்வதன் மூலம் மனதில் உள்ள அகங்காரம் ஆடையோடு நீங்கும். அவ்வையின் அகங்காரம் மனதை விட்டு அகன்றது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Murugan kovil

இது போன்ற திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அந்தந்த திருத்தலத்தில் உள்ள இறைவனின் பதிகங்களை வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து பாராயணம் செய்வதன் மூலமும் பிரச்சனை தீர வாய்ப்புள்ளது.