இந்த 3 எண்ணெயை ஒன்றாக சேர்த்து முடியில் தடவினால், 3 பாகங்களாக பிரித்து முடியை பின்னிக் கொள்ள 2 கை பத்தாது. அந்த அளவிற்கு முடி அடர்த்தியாக வளரும்.

hair5
- Advertisement -

சில பேருக்கு முடியை மூன்று பாகங்களாகப் பிரித்து அழகாக ஜடை பின்னி போடவே முடியாது. மெல்லிசாக இருக்கும். பெண்கள் என்ன தான் லூஸ் ஹேர் விட்டு கொண்டாலும், முடியை பின்னி அழகாக தொங்கவிடுவதில் இருக்கக்கூடிய அழகு வருமா. உங்களுடைய முடியை பின்னிக் கொள்ள முடியவில்லையா. மெல்லிசாக உள்ளதா. இந்த சுலபமான குறிப்பு உங்களுக்காக மட்டும். மூன்றே மாதங்கள் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி வந்தால் உங்களுடைய முடியிலும் நிச்சயம் அடர்த்தியான பின்னலை போட்டு தொங்க விட்டுக் கொள்ள முடியும். அப்படி ஒரு ஹேர்பேக் என்னது? இப்போதே தெரிந்து கொள்வோமா.

ஒரு சிறிய கிண்ணத்தை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், இந்த மூன்று எண்ணெயையும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். ஒரு மீடியம் சைஸ் இருக்கக்கூடிய வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

சின்னவெங்காயம் ஆக இருந்தால் 3 அல்லது 4 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயமும் எடுக்கலாம். பெரிய வெங்காயம் ஆக இருந்தால் ஒரே ஒரு வெங்காயத்தை எடுத்து அதை மிக்சியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுக்க வேண்டும். 2 டேபிள்ஸ்பூன் அளவு வெங்காயச்சாறு நமக்கு தேவை.

சிவப்பு நிற வெங்காயத்தை தான் பயன்படுத்த வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய வெங்காயத்தை பயன்படுத்தக்கூடாது. மூன்று எண்ணெயையும் ஊற்றி கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா. அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் 2 டேபிள்ஸ்பூன் வெங்காய சாறை ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். எண்ணெயையும் தண்ணியையும் கலக்க கொஞ்சம் கஷ்டம்தான். தேவைப்பட்டால் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டி கலந்து கொள்ளுங்கள். இப்போது நமக்கு தலைமுடிக்கு அப்ளை செய்ய எண்ணெய் தயாராக உள்ளது.

- Advertisement -

இதை அப்படியே உங்களுடைய கையில் எடுத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி அப்ளை செய்து கொள்ளலாம். இருந்தாலும் ஆனியன் ஜூஸ் சேர்த்து இருப்பதால் கையில் இதை அப்ளை செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஒரு காட்டன் பஞ்சை வைத்து இந்த எண்ணெயைத் தொட்டு உங்களுடைய ஸ்கால்ப்பில் வைக்கும்போது அப்ளை செய்வதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

எப்படியோ இந்த எண்ணெயை அப்படியே உங்களுடைய மயிர் கால்களில் படும்படி நன்றாக வைத்து மசாஜ் செய்துவிட்டு அதன் பின்பு முடி நீளமாக இருக்கும் பாகங்களிலும் இந்த எண்ணெயைத் தேய்த்து அப்படியே கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். மொத்தமாக 30 நிமிடங்கள் இந்த ஆயில் உங்களுடைய தலையில் இருக்கலாம். ரொம்பவும் சளி பிடிக்கும் தலைபாரம் வருமென்றால் 15 லிருந்து 20 நிமிடத்திற்குள் ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளுங்கள்.

முடியை காய வைத்து விட்டு, சிக்கி எடுத்து பாருங்கள். இது உங்கள் முடி தானா என்று ஆச்சரியப்படுவீர்கள். ஒரு முறையிலேயே முடி சாஃப்ட்டாக சில்கி ஆக மாறி இருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் இப்படி செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். ரிசல்டை பின்பு கண்ணாடி முன்பு பாருங்கள்.

- Advertisement -