சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்களையும் சேர்த்து அரைத்து ஹேர் பேக் போட்டால், ஒவ்வொரு முடியும் 3 மடங்கு அடர்த்தியாகும்.

hair-pack-pachai-payaru
- Advertisement -

புரோட்டின் சத்து அதிகமாக இருந்தால் தான் நம்முடைய தலையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு முடியும் அடர்த்தியாக காணப்படும். சில பேருக்கு புதிய முடி வளர்ச்சி இருக்கும். ஆனால் அந்த முடி மெல்லிசாக வலுவே இல்லாமல் வளரும். மெல்லிசாக முடி வளர்ந்தால் அந்த முடி சீக்கிரமே உதிரும். இப்படி மீண்டும் மீண்டும் முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் முடியை அடர்த்தியாக மாற்றுவது ரொம்பவும் கடினம். ஆக நம்முடைய முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, ஒவ்வொரு முடியும் தடிமனாக மாற வேண்டும் என்றால் எப்படிப்பட்ட ஹேர் பேக்கை தலையில் போடுவது. ஒரு சுலபமான புரோட்டின் சத்து நிறைந்த ஹேர் பேக் இதோ உங்களுக்காக.

இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு முதலில் சமையலறையில் இருக்கக்கூடிய மூன்று பொருட்கள் தேவை. சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசி, வெந்தயம், பச்சை பயிறு. பெரும்பாலும் இந்த மூன்று பொருட்களும் எல்லோர் வீட்டிலும் இருக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் பச்சை பயிரை, போட்டு ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். (மறுநாள் காலை பேக் தயார் செய்யப் போகின்றோம் என்றால் முந்தைய நாள் இரவே இந்த பொருட்களை எல்லாம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து விட வேண்டும்.)

- Advertisement -

நன்றாக ஊறிய இந்த பொருட்களை ஊறவைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேக்கோடு பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருள் சேர்க்க வேண்டும். அது கருவாப்பிலை இலையாக இருக்கலாம். முருங்கைக்கீரை இலையாக இருக்கலாம். அல்லது செம்பருத்தி பூ இளையாக இருக்கலாம். அது உங்கள் விருப்பம் தான். எந்த இலை கிடைக்கிறதோ அதை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து அரைத்து இந்த பேக்கை ஒரு காட்டன் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய பேக்கோடு ஏதாவது ஒரு எண்ணெய் சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் உங்கள் வீட்டில் எந்த எண்ணெய் இருக்கிறதோ அந்த எண்ணெயிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றி இந்த பேக்கை நன்றாக அடித்து கலந்து உங்களுடைய தலையில் பேக் போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மயிர் கால்களில் நன்றாக படும்படி இந்த பேக்கை போடுங்கள். அதன் பின்பு முடியும் நுனிவரை இந்த பேக்கை நன்றாக அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஜென்டில் ஆக ஒரு ஷாம்பு போட்டு வாஷ் செய்துவிட்டு உங்களுடைய முடியை தொட்டுப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். வழக்கம்போல இல்லாமல் ஒவ்வொரு முடியும் தனித்தனியாக அவ்வளவு அழகாக மாறியிருக்கும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் போட்டு வந்தால் ஒவ்வொரு முடியும் தடிமனாக மாறுவதை உங்களால் உணர முடியும்.

உங்களுடைய முடியின் அளவைப் பொறுத்து மேலே சொன்ன பொருட்களை கூடுதலாகவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். மூன்றே மாதத்தில் உங்களுடைய முடி வளர்ச்சியில் நல்லதொரு வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இந்த பேக் புடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -