நீங்கள் இந்த தவறை மட்டும் செய்தால் உங்களிடம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பணமும் நிச்சயம் நிலைக்கவே செய்யாது!

gajalakshmi-cash

மகாலட்சுமி எல்லோரிடமும் தங்குவது இல்லை. இவ்வுலகில் மூன்று விதமான செல்வங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் நமக்கு வந்து சேரும். இப்படி வரும் செல்வங்கள் நம்மிடம் நிலைக்காமல் போக நாம் செய்யும் சில தவறுகளும் காரணமாக அமைந்து விடுகிறது. பணமானது யாரிடம் நிலைத்து நிற்கும்? என்ன செய்தால் நிலைத்து நிற்கும்? பணம் வரும் மூன்று வழிகள் என்ன? பணம் நிலைக்காமல் போக நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன? இவற்றைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

indhiran1

செல்வம், பணம் என்றவுடன் மகாலட்சுமி மற்றும் குபேரன் மட்டுமே நம்முடைய நினைவிற்கு வருவார்கள். ஆனால் இன்னொருவரும் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கின்றார். அவர் தான் இந்திரன்! இந்திரன் அருள் நமக்கு இருந்தால் தான் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் இவரை பெரும்பாலானோர் வணங்குவது இல்லை. இந்திரன் வழியே வரும் செல்வம் தலைமுறை தலைமுறையாக நம்மிடம் தொடர்வது குறைவு தான். வந்த பணம் வந்த வழியே சென்று விடும்.

கிழக்கு திசையின் அதிபதியாக இருக்கும் இந்திரன் தேவர்களின் தலைவனாக இருப்பவர். இவரை வழிபட்டால் அரச போகம், வீடு, பசு ஆகியவை பெருகும். இந்திர சம்பத்து நீடித்து நிற்க குலதெய்வ அருள் வேண்டும். குலதெய்வத்தை தவறாமல் பூஜித்து வந்தால் இந்திர செல்வம் உண்டாகும். கிரிவலம் வருதல் இந்திர செல்வத்தை அடைவதற்கு சிறந்த வழியாக இருக்கும். இத்தகைய இந்திர செல்வத்தை தக்க வைத்துக் கொள்வது எளிதான காரியம் அல்ல! மூன்று தலைமுறைகள் வரை இச்சொத்துக்கள் நீடித்து நிற்க மேற்கூறிய நல்ல விஷயங்களை செய்யுங்கள்.

kuberan

அசுரகுல தலைவன் ராவணனுக்கு சகோதரனாக இருக்கும் குபேரனுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்தது அவருடைய குணத்தை கொண்டு தான். குபேர சம்பத்து பெற தயாள குணத்துடன் இருப்பது அவசியமாகும். கிடைக்கின்ற பணத்தை தான் மட்டும் செலவு சுயநலமாக செலவு செய்து கொண்டிருந்தால் அவர்களிடம் பணமானது தங்காது. சங்கநிதி, பதுமநிதி போன்ற நவ நிதிகளையும் கொண்டவர் குபேரன். குபேரன் மூலம் வரும் செல்வம் நமக்கு நிலைக்க அன்னதானம் செய்வது, ஏழை குடும்பத்திற்கு திருமண உதவிகள் செய்வது, பொதுக் காரியங்கள் செய்வது, ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது மூன்று தலைமுறைக்கு இந்த சொத்துக்கள் நம்மிடம் நிலைக்கும்.

- Advertisement -

குபேர சொத்துக்கள் பொருத்தவரை திடீரென வரும் அதிர்ஷ்டம் போன்றது தான். அறக்கட்டளை என்ற பெயரில் சுயலாபம் காண்பது, லாட்டரி டிக்கெட் போன்ற அதிர்ஷ்டத்தின் வாயிலாக வரக்கூடிய செல்வம் குபேர செல்வம் ஆகும். இந்த செல்வம் எப்படி வந்ததோ! அதே வழியில் திரும்பி சென்று விடும். எனவே இச்செல்வத்தை நீடிக்க செய்ய மேற்கூறிய விஷயங்களை செய்து வருவது நல்ல பலன் தரும்.

mahalakshmi3

செல்வத்தின் தலைவியாக இருக்கும் மகாலட்சுமி மூலம் வரும் செல்வம் ஒருபொழுதும் நம்மை விட்டு செல்வது இல்லை. மகாலட்சுமியின் மூலம் வரக்கூடிய செல்வம் அவ்வளவு எளிதாக யாருக்கும் வந்துவிடுவது இல்லை. ஏழு தலைமுறைகள் வரை நிலைத்து நிற்கக்கூடிய இந்த செல்வமானது எப்பொழுதும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வரும். ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்கிற பழமொழிக்கு ஏற்ப பதினாறு வகையான செல்வங்களும் மகாலட்சுமியின் மூலம் வருவது ஆகும்.

money

உண்மையிலேயே தயாள மனம் படைத்தவர்கள், மற்றவர்களிடம் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளாதவர்கள், இனிமையானவர்கள், நல்ல சொற்களை பேசுபவர்கள், பொது வாழ்வில் ஈடுபட்டு உள்ளவர்கள் போன்றவர்களிடம் மட்டுமே மகாலட்சுமியின் மூலம் வரக்கூடிய செல்வங்கள் நிலைத்து நிற்கும். இப்படி மூன்று வழியில் வரக்கூடிய செல்வங்களும் நம்முடைய குணத்தை பொறுத்து தான் நம்மிடம் நிலைத்து நிற்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டால் நீங்களும் பணக்காரர் தான்.