இன்றைய காலத்தில் இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும் வசதி படைத்த கோடீஸ்வரராக இருந்தாலும் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற ஒன்றை வாங்கி இருப்பார்கள். அந்த கடனால் கண்டிப்பான முறையில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் திகழ்கின்றன. அவற்றும் சில வழிபாடுகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர ஆன்மீக குறிப்புகள்
ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பண பற்றாக்குறையின் காரணமாக பிறரிடம் இருந்து கடன் வாங்கி இருப்போம். அந்த கடனை திருப்பி அடைப்பதற்காக பல விதங்களில் முயற்சி செய்தும் பண தட்டுப்பாட்டின் காரணமாக அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு அந்த கடனுக்குரிய வட்டியை அடைப்பதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகி இருக்கும். இந்த சூழ்நிலைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு பலவிதமான முயற்சிகளை செய்வதோடு தெய்வ அருளையும் நாம் பெற வேண்டும். அந்த வகையில் தெய்வ அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
கடன் பிரச்சனை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் அந்த முயற்சிகளை செய்வதற்கு முன்பாக என்றைக்கு அந்த முயற்சியை செய்கிறோமோ அந்த நாளில் செவ்வாய் பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் குரு ஹோரை இருக்கக்கூடிய நேரத்தில் செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்துவிட்டு பிறகு அந்த முயற்சியில் ஈடுபட்டோம் என்றால் அந்த முயற்சிகள் வெற்றி அடையும். இதே போல் வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணியில் இருந்து 9 மணிக்குள் சுக்கிர பகவானை நாம் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தோம் என்றாலும் சுக்கிர பகவானின் அருளால் கடன் பிரச்சினை தீருவதற்குரிய பண வரவு உண்டாக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் வீட்டில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க செய்வதன் மூலம் விஷ்ணு பகவானின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும், கடன் பிரச்சனையும் சரியாகும். மேலும் இதே போல் மகாலட்சுமி தாயாருக்கு செந்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தோம் என்றாலும் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர கோரையில் இந்த செந்தாமரை அர்ச்சனையை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தரித்திரமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்குவதோடு பணவரவு அதிகரிக்கும். அதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினையும் தீரும்.
எந்த அளவிற்கு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்றும் நிலை வாசலுக்கு எந்த அளவிற்கு பூஜை செய்து வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்றும் ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பொருளாதார வளர்ச்சி உண்டாக வெள்ளி பரிகாரம்
இந்த ஆன்மீக குறிப்புகளில் ஏதாவது ஒன்றை முழுமனதோடு முறையாக பின்பற்றி வருபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.