விரைவில் கோடீஸ்வரர் அந்தஸ்தை பெற வேண்டுமா? 4 கிராம்பு போதும்.

cash-kirambu

எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும். எல்லோரும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். எல்லோரும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் உண்டா? இப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டு வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது? காலத்திற்கு ஏற்றது போல் வாழ கற்றுக் கொள்வது தானே நல்லது. பணம் உள்ளவர்களுக்கு கிடைக்கப்படும் மதிப்பு, மனம் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லையே. இதற்காகவாவது அடித்து பிடித்து எதையாவது செய்து நிச்சயம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற தீர்மானத்தோடு தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள சில வழிமுறைகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

elumichai lemon

உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் வாராக்கடன் தொகை நிலுவையில் இருக்கும். நீங்கள் புதியதாக தொடங்கும் தொழிலானது நல்ல லாபத்துடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். கடனை வசூலிக்க அல்லது பணம் பெறுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வெளியில் செல்லும் சமயத்தில், புதியதாக தொழில் தொடங்கும் முயற்சிக்கு செல்லும் சமயத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு திசையிலும் நான்கு சிறு ஓட்டைகளை போட்டுக் கொள்ளுங்கள். அதில் நான்கு கிராம்புகளை சொருகி ஒரு பேப்பரில் மடித்து உங்களது பாக்கெட்டிலோ அல்லது பையிலோ வைத்து எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் செல்லும் காரியம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் வெற்றிதான். திரும்பி வரும்போது அந்த எலுமிச்சம் பழத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கிப் போட்டுவிடலாம். திரும்பவும் கட்டாயம் வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது.

உங்களது வீட்டில் செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில், நான்கு கிராம்புகளை எடுத்துக்கொண்டு, சிகப்பு பட்டு துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி உங்கள் வாசல் படியின் வெளிப்பகுதியில், மேலே மத்தியில் மாற்றிவிட வேண்டும். உங்களது வீட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் பணவரவு வந்து கொண்டே இருக்கும். இதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

krambu

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு என்ன செய்து சம்பாதிப்பது என்று வழி தெரியாது. இப்படிப்பட்டவர்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு தீபத்தை ஏற்றி இறைவனுக்கு முதலில் கற்பூர ஆராதனை காட்டி விட்டு, பின்பு அதே கற்பூரத்தில் இரண்டு கிராம்புகளை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுவது போல் உங்கள் வீட்டில் எல்லா அறைகளிலும், மூலை முடுக்குகளிலும் காட்ட வேண்டும். எரியும் கற்பூர புகையில், லவங்கத்தின் வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவி, உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் அந்த கெட்ட சக்தியை வெளியேற்றி விடும். நீங்கள் பணம் சம்பாதிக்க எந்த வழியில் செல்ல வேண்டுமோ அந்த வழியை தானாகவே தெரிந்து கொள்வீர்கள். ஒரு 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே போதும் அதற்கான பலனை உங்களால் உணர முடியும்.

- Advertisement -

sambrani

இதெல்லாம் செய்தால் பணக்காரர் ஆகி விட முடியுமா என்ற கேள்வி உங்களது மனதில் எழுவது புரிகிறது. ஆனால் உங்களுடைய முயற்சிகளோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து வாருங்கள். வட மாநிலத்தில் உள்ளவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், இப்படிப்பட்ட முறைகளை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே வருவதால் தான் பணம் படைத்தவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றது என்ற சந்தேகம் உள்ளதா? விரட்டியடிக்க இந்த மூலிகை சாம்பிராணி ஒன்றே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kodutha panam thirumba vara Tamil. Panam sera Tamil. Panam sera pariharam Tamil. Elumichai kirambu vasiyam.