உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கின்றது என்ற சந்தேகம் உள்ளதா? விரட்டியடிக்க இந்த மூலிகை சாம்பிராணி ஒன்றே போதும்.

இந்த காலகட்டத்தில் எல்லாம் நம் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் பழக்கத்தையே விட்டுவிட்டோம் என்று கூறினால் அது பொய்யாகாது. சிலர் வீடுகளில் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களை பற்றி எந்த ஒரு தவறான கருத்தும் இல்லை. ஆனால் வேலைப்பலு காரணமாக சில பேர் வீட்டில் இறைவனுக்கு ஊதுவத்தி கூட காட்ட முடியாத நிலை இன்றைய சூழ்நிலையில் இருந்துதான் வருகின்றது. அதை யாராலும் மறுக்க முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் சிலருக்கு வீடு மூதேவி அடைந்தது போல் காட்சி தரும். வீட்டிற்குள் வந்தாலே தூக்கம் வரும். சோம்பேறித்தனம் வரும். எந்த ஒரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடமுடியாது. இப்படி அந்த வீடு ஒரு மகாலட்சுமி அம்சம் இல்லாமல் கெட்ட சூனியம் அடைந்தது போல இருளில் மூழ்கியிருக்கும். இருள் என்றால் விளக்கு வெளிச்சத்தை குறிப்பிடுவது அல்ல. அது ஒருவிதமான பிரகாச மற்ற சூழலை குறிப்பது. இப்படிப்பட்ட வீடுகளாக இருந்தாலும் சரி. தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி. அந்த இடத்தில் இந்த மூலிகை சாம்பிராணியை தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வந்தால் போதும். உங்கள் வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் எப்படிப்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது மறைந்து நல்ல பலனை நம்மால் பெற முடியும்.

sambraani

இந்த மூலிகை சாம்பிராணி தயாரிக்க வெண்கடுகு 1 கப், மருதாணி விதை ஒரு 1 கப்,  நாய்க்கடுகு 1 கப், அருகம்புல் பொடி 1/2 கப், வில்வ இலை பொடி 1/2 கப், வேப்ப இலை பொடி 1/2 கப், குங்கிலியம் 1/2 கப். இந்த பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெண் கடுகு, மருதாணி விதை, நாய்கடுகு இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு நறநறவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்தப் பொடியுடன், அருகம்புல் பொடி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி இந்த மூன்று பொடிகளையும் நன்றாக சேர்ந்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். குங்கிலியமை கற்களால் நன்றாக இடித்து விட்டு, பின்பு மிக்ஸியில் சேர்த்து அரைத்து இந்த பொடியுடன் சேர்த்து விடவும். எல்லா கலவைகளையும் நன்றாக ஒன்றாக கலந்து காற்றுப் புகாமல் இருக்கும் ஒரு டப்பாவில் அடைத்துக் கொள்ளலாம்.

வீட்டில் தேங்காய் கொட்டாங்குச்சியை எரித்து வந்த நெருப்பு இருந்தாலே போதும். அதில் உண்டாகும் நெருப்பில் இந்தப் பொடியை சேர்த்து வீட்டில் தொடர்ந்து 48 நாட்கள் காலையும், மாலையும்  தூபம் போட்டு வந்தால் அதில் கிடைக்கும் பலனை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். 48 நாட்கள் இந்த தூக்கத்தை போட்டு முடித்து விட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது. வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் இந்த தூபத்தை போடுவது வீட்டிற்கும் தொழில் செய்யும் இடத்திற்கு மிகவும் நல்லது.

sambrani

தீய சக்தி இருந்தால் தான் இதை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றாலும் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வரலாம்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வம் தெரியாதவர்கள் கருங்காலியை வைத்து இப்படி வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mooligai sambrani preparation. Mooligai sambrani in tamil. Mooligai sambrani seivathu eppadi. Mooligai sambrani powder. Herbal sambrani powder.