உங்கள் வீட்டில் 4 திசைகளிலும் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் தரித்திரம் கூட வெளியே சென்றுவிடும். 4 திசைகளை பார்த்தவாறு இந்த தெய்வத்தின் படம் இருந்தால்!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லையோ அந்த வீட்டில் தரித்திரம் தலைவிரித்து ஆட தான் செய்யும். எந்த வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கின்றார்களோ, அந்த வீட்டில் நிச்சயமாக தரித்திரம் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படும். நம்முடைய வீட்டில் தெரியாமல் கூட தரித்திரம் குடியேற நாம் அனுமதிக்கவே கூடாது. சரித்திரத்திற்கு பின்னாலேயே நம்மை வறுமை வந்து தொற்றிக்கொள்ளும். வறுமை வந்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. வீட்டில் இருக்கும் தரித்திரத்தை நீக்க வறுமையை விரட்டி அடிக்க, நான்கு திசைகளிலிருந்தும் நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் இருக்க என்ன செய்வது?

mahalashmi3

ஒரு வீடு என்று இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் கட்டாயமாக மகாலட்சுமியின் திருவுருவப்படம் கட்டாயம் இருக்கும். அந்த மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை எந்தெந்த திசையில் எப்படி வைத்தால், அதிர்ஷ்டம் வீட்டிற்குள் வரும். இந்த மகாலட்சுமியின் திருவுருவப் படத்தோடு வேறு எந்த படங்களை, எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான விடை தெரிந்து விட்டாலே போதும். நம்முடைய வீட்டை அதிர்ஷ்டம் நிறைந்த வீடாக மாற்றி விடலாம்.

முதலில் நான்கு திசைகளிலிருந்தும் நமக்கு கஷ்டம் வருவதை தடுத்து நிறுத்த அஷ்டலட்சுமிகளும் இருக்கக்கூடிய படத்தை தெற்கு பார்த்த வாறு வைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தெற்கு பார்த்தவாறு தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது என்று தான் சொல்லுவார்கள். இருப்பினும் அந்த தோஷமானது இந்த அஷ்ட லக்ஷ்மிகளும் இருக்கக்கூடிய திருவுருவப்படத்திற்கு இல்லை.

vasthu-vastu

ஏனென்றால் நான்கு திசைகளும், எட்டு திக்குகளிலும் சூழப்பட்டது தான் இந்த உலகம். அந்த எட்டுத்திக்கில் இருந்து வரக்கூடிய எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இந்த அஷ்ட லட்சுமியின் திருவுருவப் படத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆக உங்கள் வீட்டில் தெற்கு பார்த்தவாறு ஒரு அஷ்டலட்சுமியின் திருவுருவப் படத்தை மாட்டி வையுங்கள். பாக்கெட்டில் வைக்கக்கூடிய அளவு சிறிய அஷ்டலட்சுமியின் படம் இருந்தாலும் தெற்கு பார்த்தவாறு சுவற்றில் ஒட்டி வையுங்கள் போதும்.

- Advertisement -

அடுத்தபடியாக வடக்குப் பார்த்தவாறு விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியும் சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு படம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். இது பணவரவை வீட்டிற்கு அதிகப்படுத்தி கொடுக்கும். அடுத்தபடியாக ஒரு வீட்டில் கிழக்கு பார்த்தவாறு கட்டாயமாக விநாயகரின் திருவுருவப்படம் இருக்க வேண்டும். அடுத்தபடியாக மேற்கு பார்த்தவாறு ராமர் சீதை அனுமன் 3 பேரும் சேர்ந்த ஒரு படத்தை மாட்டி வைப்பது வீட்டிற்கு சுபிட்சத்தை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

lakshmi-ganapathy

இப்படியாக நான்கு திசைகளை பார்த்தவாறு இந்த நான்கு தெய்வங்களின் திரு உருவப்படம் ஒரு வீட்டில் இருந்து விட்டாலே போதும். அந்த வீட்டிற்கு நான்கு திசைகளிலிருந்தும் வரக்கூடிய கஷ்டங்கள் எதிர்மறை ஆற்றல் குறையும். நான்கு திசைகளிலிருந்தும் நேர்மறை ஆற்றலும், அதிர்ஷ்டமும் அந்த வீட்டை தேடி தொடர்ந்து வர ஆரம்பித்துவிடும்.

இந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. சிறிய அளவில் காகிதத்தில் இருக்கக்கூடிய படத்தை கூட நீங்கள் பக்தியோடு இந்த நான்கு திசைகளில், மேற்சொன்னபடி ஒரு ஸ்டிக்கர் வைத்து ஒட்டிப் பாருங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் வருவதை உணர்ந்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்களுக்கு சில நாட்களிலேயே தீர்வு கிடைக்கும் பட்சத்தில், அதன் பின்பு நிரந்தரமாக இந்த படங்களை பிரேம் போட்டு அந்தத் திசைகளில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.