நிறைய பேருக்கு அபிஜித் முகர்த நேரத்தை பற்றி தெரிந்து இருக்கும். தினம் தினம் சூரிய உதயத்திற்கு பிறகு, 6 மணி நேரம் கழித்து வரக் கூடிய, நேரத்தை அபிஜித் முகூர்த்த நேரம் என்று சொல்லுவார்கள். இந்த நேரத்தில் எந்த வேலையை தொடங்கினாலும் அது வெற்றி தரும். ஆனால், அபிஜித் நட்சத்திரம் என்று ஒன்று இருக்கிறது.
நமக்கு தெரிந்ததெல்லாம் 27 நட்சத்திரம் தான். ஆனால் கிருஷ்ணரால் மறைக்கப்பட்ட நட்சத்திரமாக சொல்லப்படக்கூடிய, இந்த அபிஜித் நட்சத்திரம் பற்றி உங்களுக்கு தெரியுமா. இது மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ மட்டும் தான் வரும். டிசம்பர் மாத அபிஜித் நட்சத்திர நேரம் எப்போது வருகிறது தெரியுமா.
நாளைய தினம் அதாவது 5.12.2024 ஆம் தேதி, வியாழக்கிழமை இந்த அபிஜித் நட்சத்திரம் வரவிருக்கின்றது. இந்த அபிஜித் நட்சத்திரமானது 24 நிமிடங்கள் நீடிக்க போகிறது. நாளை அந்த குறிப்பிட்ட அபிஜித் நட்சத்திரம் எந்த நேரத்தில் வருகிறது. அந்த நேரத்தில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை வைத்தால் நம்முடைய வரங்களை சுலபமாக பெறலாம், பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
டிசம்பர் 2024 அபிஜித் நட்சத்திரம்
5.12.2024 மாலை 5:14 மணி முதல் 5:38 மணி வரை அபிஜித் நட்சத்திர நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட 24 நிமிடங்கள் தான் இறைவனிடம் நாம் பிரார்த்தனை வைக்க போகின்றோம். இந்த அபிஜித் நட்சத்திரத்திற்கு சொந்தமான கடவுள் கிருஷ்ண பரமாத்மா. இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும், அது அமோக வெற்றியைக் கொடுக்கும்.
இந்த நட்சத்திரத்தில் ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், என்று எதையுமே பார்க்க வேண்டாம். அபிஜித் நட்சத்திரம் இருக்கிறது என்றால், அந்த நேரத்தில் நல்ல விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த நேரத்தை நாம் தவறவிடலாமா.
சரி, இந்த அபிஜித் நட்சத்திரத்தில் எப்படி வேண்டுதல் வைப்பது. பூஜையறையில் 2 நெய் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து உங்களுடைய குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அவரவருக்கு என்னென்ன விஷயங்களில், என்னென்ன முயற்சிகளில், வெற்றி காண வேண்டுமோ, அதை பற்றிய பிரார்த்தனையை இறைவனிடம் வையுங்கள்.
கிருஷ்ணரின் திரு உருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இல்லை என்றால் விநாயகரை வழிபட்டாலும் நல்லது நடக்கும். நீங்கள் என்ன கேட்டாலும் இறைவன் உங்களுடைய புண்ணிய சக்திக்கு தகுந்தது போல பலனை, நிச்சயம் கொடுப்பான்.
இந்த 24 நிமிடத்தை யாரும் தவற விட வேண்டாம். அவரவர் நலனுக்காக இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அபிஜித் நட்சத்திரத்தை கொடுத்தால் பூமியில் இருக்கும் மனிதர்கள் எங்கே தவறாக பயன்படுத்தி விடுவார்களோ, என்பதற்காக தான் அந்த கிருஷ்ண பரமாத்மா அந்த நட்சத்திரத்தை மட்டும் தன்னுடைய மயிலிறகில் மறைத்து விட்டார்.
இதையும் படிக்கலாமே: திருவண்ணாமலை தீபத் திருவிழா 2024
இப்பேற்பட்ட அதிசயத்தக்க நட்சத்திரத்தை நாம் எக்காரணத்தை கொண்டும் தவறாக பயன்படுத்திவிட கூடாது. நல்லதுக்கு மட்டுமே இந்த நட்சத்திர நேரம் பயன்படுத்தப்பட வேண்டும். அபிஜித் நட்சத்திரம் நேரத்தில், நல்லதை மட்டுமே நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அடுத்தவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் தீங்கு நினைக்க கூடாது என்ற விஷயத்தை வலியுறுத்தி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.