இந்த 5 எழுத்து மந்திரத்தை உச்சரித்தால் உயிரே போகும் அளவிற்கு ஆபத்து இருக்கிறதா? அப்படி என்ன மந்திரம் அது?

sivan mantra

மந்திரங்கள் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும் என்று ஆன்மிகம் கூறுகிறது. மந்திரங்கள் சொல்லப்படும் பொழுது அதிலிருந்து உண்டாகும் ஒலி அலைகள் உருவம் அடைந்து அதற்குரிய ஆற்றலையும் பெறுகின்றது. நாம் எப்படி ஒரு வார்த்தையை சத்தம் போட்டு கூறும் பொழுது, அதன் அதிர்வலைகள் காற்றில் பரவி நெடுந்தூரத்தில் இருப்பவர்களுக்கு கேட்கிறதோ! அதேபோலொரு விஷயம் தான் மந்திரங்களும் பெற்றுள்ளன. அவ்வரிசையில் இந்த ஐந்து எழுத்து மந்திரத்திற்கு இருக்கும் சக்திகளை கேட்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கும். அது என்ன மந்திரம்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

sivan

‘சிவாயநம’ என்கிற ஐந்து எழுத்து மந்திரத்தை யாராவது கேட்கும் பொழுது அவர்கள் உயிர் பிரிந்து விடுவதாக கதை ஒன்று உள்ளது. அது என்ன கதை என்று பார்ப்போம். ஒரு முறை நாரதர் தனது தந்தையாக இருக்கும் பிரம்ம தேவரிடம் சென்று இந்தக் கேள்வியை கேட்டார். ‘சிவாயநம’ என்கிற மந்திரத்திற்கு ஏன் இவ்வளவு சக்திகள் உள்ளது என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, பிரம்மதேவர் என்ன கூறினார் தெரியுமா?

அருகில் இருக்கும் ஒரு செடியை காண்பித்து அதில் இருக்கும் வண்டிடம் போய் இதே கேள்வியை கேள் என்று கூறினாராம். நாரதரும் வண்டிடம் சென்று இக்கேள்வியை கேட்க, உடனே வண்டு கீழே சுருண்டு விழுந்து இறந்து போனதாம். இதனைக் கண்ட நாரதருக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பிரம்ம தேவரிடம் நாரதர் சென்றுவிட்டார். பிரம்மதேவர் உனக்கு என்ன இதிலிருந்து புரிந்தது? என்று கேட்டார். அதற்கு நாரதர், இந்த மந்திரத்தை கேட்பவர்கள் இறந்து விடுவார்கள் என்று புரிந்தது எனக் கூறினார்.

Poochi Kadi

அதற்கு பிரம்மதேவர், நீ தவறாக புரிந்து கொண்டு இருக்கிறாய் என்று கூறினார். சரி அதை விடு, இதே கேள்வியை அங்கிருக்கும் அந்த ஆந்தையிடம் போய்க் கேள் என்று கூறினாராம். நாரதரும் அந்த ஆந்தையிடம் அதே கேள்வியை கேட்க, அதுவும் உடனே இறந்து போனது. இதனால் மேலும் அதிர்ச்சி ஏற்பட்ட நாரதர் செய்வதறியாது திகைத்து நின்றார். மீண்டும் பிரம்மதேவர் இதே கேள்வியை, இன்று பிறந்த அந்தணர் உடைய பசுவிடம் சென்று கேட்க சொன்னார்.

- Advertisement -

அந்தணரின் பசுவிடம் சென்று நாரதர் அக்கேள்வியை கேட்க, பசுவும் இறந்து போனது. மீண்டும் பிரம்மதேவர் இதே கேள்வியை இந்நாட்டு மன்னனின் புதிதாகப் பிறந்த குழந்தையிடம் சென்று கேட்க சொன்னார். நாரதர் தயங்கி தயங்கி நின்றாராம். மன்னருடைய குழந்தையிடம் சென்று கேட்டால், அக்குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், மன்னர் என்னை கொன்றே விடுவார் என்று பயந்து போய் விட்டார். இல்லை! இல்லை! இம்முறை சென்று குழந்தையிடம் கேள், உனக்கு பதில் கிடைக்கும் என்று அனுப்பி வைத்தார் பிரம்மதேவர்.

aanthai-kan

நாரதரும் மன்னனின் குழந்தையிடம் சென்று இக்கேள்வியை மீண்டும் கேட்க, குழந்தை பதில் கூறியது, நீர் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது வண்டாக இருந்த நான் பிறவி முடிந்து, ஆந்தையாக பிறந்தேன்! மீண்டும் அந்த ஆண்டை பிறப்பில் இருந்து முக்தி பெற்று, கன்றாக பிறந்தேன். அப்பிறவியும் முடிந்து இப்பொழுது. உயர் பிறப்பான மானிடப் பிறவியில் பிறந்துள்ளேன். பிறவியில் உயர்ந்தது மனிதப்பிறவி தான்.

narathar

இதை கொடுத்தது நீங்கள் கூறிய அந்த மந்திரம் தான். இப்பிறவியில் மோட்சம் பெற்று இறைவனிடம் நான் சேர்ந்து விடுவேன் என்று அக்குழந்தை மகிழ்ச்சியுடன் கூறியது. ‘சிவாய நம’ என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நான் என்கிற ஆணவம் ஒழிந்து பிறவிக் கடலை கடந்து இறைவனிடம் நேரடியாக சேர்ந்து விடுவதாக ஆன்மிகம் கூறுகிறது. மந்திரத்தில் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உச்சரித்து நீங்களும் பயன் பெறுங்கள்.