ரவை போண்டா சுவையாக 5 நிமிடத்தில் டீ போடும் சமயத்தில் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, எல்லோருமே தட்டு முழுக்க உடனே காலி பண்ணிடுவாங்க!

ravai-bonda-recipe
- Advertisement -

விதவிதமான போண்டா வகைகளில் இந்த ரவை போண்டா செய்வது ரொம்பவே சுலபம் தான். ரவை, மைதா கொண்டு செய்யப்படும் இந்த போண்டா நல்ல சுவையாக இருக்கும். மேலும் அதிக பொருட்கள் இல்லாமல் சட்டுனு செய்யக்கூடிய இந்த ரவை போண்டா டீயுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு இதமாக இருக்கும். இதற்கு தொட்டுக்கக் கூட ஒன்றுமே தேவையில்லை. கிரிஸ்பியான ரவை போண்டா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

ரவை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், மைதா – கால் கப், சமையல் சோடா – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, தயிர் – ஒரு கப்.

- Advertisement -

ரவை போண்டா செய்முறை விளக்கம்:
இன்ஸ்டன்ட் ரவை போண்டா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு ரவை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு கால் கப் மைதா எடுத்து கலந்து கொள்ளுங்கள். போண்டா உப்பி நன்கு மொறு மொறுவென்று வருவதற்கு சமையல் சோடா அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்

பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். எவ்வளவு பொடிப்பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். வெங்காயம் மட்டும் அல்லாமல் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியையும் இதே போல நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இரண்டு பச்சை மிளகாய்களை சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இதனுடன் துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மைதா, ரவை எல்லாம் சேர்த்து இருப்பதால் பெருங்காயத்தூள் இரண்டு சிட்டிகை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது எல்லாவற்றையும் நன்கு கலந்து கொண்ட பின்பு ஒரு கப் அளவிற்கு ரவை எடுத்துக் கொண்டிருப்பதால், ஒரு கப் அளவிற்கு தயிர் சேர்க்க வேண்டும். தயிர் கெட்டியாக புளிப்பு தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். கெட்டி தயிர் சேர்த்த பின்பு போண்டா மாவு பதத்திற்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே 15 நிமிடங்கள் ஊற விட்டு விடுங்கள்.

ரவை நன்கு ஊறிவிடும். அதன் பிறகு சிறிதளவு மாவை எடுத்து கீழே போட்டால் தொப் என்று விழ வேண்டும். அந்த பதத்திற்கு நீங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உப்பு, காரம் எல்லாம் பார்த்து அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு, சிறு சிறு போண்டாக்களாக கைகளில் மாவை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். எல்லா புறமும் சிவக்க வேக பொறுமையாக பொறித்து எடுத்தால் சுவையான ரவை போண்டா தயார்! இதே மாதிரி நீங்களும் செஞ்சு கொடுங்க வீட்டில் அனைவரும் உங்களை பாராட்டுவாங்க.

- Advertisement -