5 நிமிடத்தில் ஆரோக்கியமான கருவேப்பிலை சட்னி இப்படி செய்து பாருங்கள். இட்லி தோசைக்கு நிறைவான சைட் டிஷ்.

karuveppilai-chutney
- Advertisement -

பொதுவாகவே வீட்டில் இருக்கும் அம்மா, குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அதில் ஒரு திருப்தி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது உண்டு. சத்தான ஒரு சமையலை சமைத்துக் கொடுத்திருக்கின்றோம் என்று தான். எல்லா நேரத்திலும் கஷ்டப்பட்டு சத்தான உணவுகளை சமைக்க முடியாது. சொல்லப்போனால் சுலபமாக கிடைக்கக்கூடிய, சுலபமாக சமைக்க கூடிய சில பொருட்களில் தான் சத்துக்கள் ஏராளமாக அடங்கி இருக்கும். அப்படி இரண்டு சட்னி ரெசிபிகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கருவேப்பிலை சட்னி:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் எள்ளு – 1 ஸ்பூன், துருவிய தேங்காய் – 1/2 கப், பச்சை மிளகாய் – 3 லிருந்து 4 காரத்திற்கு ஏற்ப, கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, இஞ்சி – 2 இன்ச் தோல் சீவியது, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். வதக்கியை இந்த பொருட்களை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக பழுத்த தக்காளி பழம் – 1 போட்டு பச்சை வாடை போகும் வரை தொக்காக வதக்கி இதையும் மிக்ஸி ஜாரில் இருக்கும் பொருட்களோடு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஓரளவுக்கு கட்டியாக இந்த சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் கட்டியாக வேண்டாம். ரொம்பவும் தண்ணீராகவும் அரைக்க வேண்டாம். வெங்காய சட்னி போல இந்த சட்னியை அரைத்து வழித்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, வர மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அப்படியே சட்னியில் கொட்டி கலந்து இட்லி தோசைக்கு பரிமாறினால் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த இந்த சட்னியை மிஸ் பண்ணாம எல்லோர் வீட்டிலும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

இன்ஸ்டன்ட் கார சட்னி:
இந்த கார சட்னிக்கு 10 இட்லி பத்தாது பார்த்துக்கோங்க. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் – 6, சின்ன நெல்லிக்காய் அளவு – புளி, நறுக்கிய தக்காளி பழம் – 1, தோல் உரித்த பூண்டு பல் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 8 பல், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள்.

4 ஸ்பூன் நல்லெண்ணெயை தாளிப்பு கரண்டியில் ஊற்றி, அது நன்றாக சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய், தாளித்து இந்த எண்ணெயை சுடச்சுட அப்படியே சட்னியில் கொட்டி கலந்து இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள் அம்புட்டு ருசி இருக்கும். இந்த ரெண்டு சட்னியையும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -