வாழ்க்கையில் இந்த 5 பிரச்சனைகளை எதிர் கொள்ளாத மனிதப்பிறவி இருக்கவே முடியாது. அந்த 5 பிரச்சனைகள் என்னென்ன? பிரச்சனைகளுக்கான சுலபமான தீர்வு உங்களுக்காக இதோ!

sad

அட, மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு பிரச்சினைக்கா பஞ்சம் இருக்கப் போகின்றது. இன்றைய சூழ்நிலையில் இரும்பல் வந்து, தும்பல் வந்தால் கூட அது ஒரு பிரச்சினையாக தான் சொல்லப்படுகின்றது. நம்முடைய வாழ்க்கை அந்த அளவிற்கு மிக மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பிரச்சனைகளில் வரிசையில், மிக மிக முக்கியமான எல்லா மனிதர்களாலும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு 5 பிரச்சினைகளைப் பற்றியும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்து வைக்கக்கூடிய தீர்வுகள் உங்களுக்காக இதோ.

sad

முதல் பிரச்சினை எல்லா மனிதர்களுக்கும் இன்று எதிர்மறை ஆற்றல், எதிர்மறை எண்ணங்கள் இருந்து கொண்டு வருகின்றது. நல்லது நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தை தாண்டி, நமக்கு எப்போது எந்த கெடுதல் நடந்துவிடுமோ என்ற அந்த அச்சுறுத்தல் அந்த எதிர்மறை எண்ணம் மனிதனை வாட்டி வதைக்கின்றது. அந்த எதிர்மறை எண்ணங்களை நீக்க நம்முடைய சமையலில் பச்சை மிளகாயை தவிர்த்துக்கொள்வது நல்லது. பச்சை மிளகாயை அதிகமாக சேர்த்துக் கொண்டால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

சரி, எதிர்மறை எண்ணங்களை குறைத்துவிட்டோம். நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க என்ன செய்யலாம். பூசணிக்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

vellai-poosanikkai

எதிர்மறை ஆற்றலை நீக்கிவிட்டோம். நேர்மறை ஆற்றலை சேர்த்து விட்டோம். இப்போது நாம் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். தினசரி அதற்கு நாம் என்ன செய்வது? ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் ஹனுமனை மனதார நினைத்து கொண்டே இருக்க வேண்டும். தினமும் அனுமனது திருவுருவப் படத்தை பார்த்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்ற வரத்தினை கேட்கவேண்டும். சிறிய அளவில் அனுமனின் புகைப்படத்தை நம் பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். துயரம் வரும் போது அவரை பார்த்தாலே போதும் துயரம் துவண்டு போகும்.

- Advertisement -

அடுத்தபடியாக வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமான ஒரு விஷயம். திருமணம் ஆகாதவர்கள் என்ன செய்வது? நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அது கட்டாயம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். திருமணமாகாத ஏழைப் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைக்க உங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும். முடிந்தால் மதுரைக்குச் சென்று கள்ளழகரை தரிசனம் செய்வது திருமணத்தடையை போக்கும்.

marriage

திருமணம் ஆனவர்கள் சிலபேருக்கு நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை வரம் கிடைக்காமல் இருப்பது. இது வாழ்க்கையில் மிக மிகப் பெரிய கஷ்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற உதவியை கணக்கு பார்க்காமல் செய்து கொண்டே வரவேண்டும். நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். முடிந்தால் ஒருமுறை திருவெண்காடு சென்று வருவது நல்லது.

இறுதியாக மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை எதிரி பிரச்சனை. எதிரி பிரச்சனையோடு சேர்ந்து கோர்ட் கேஸ் வழக்குகள். நிம்மதியான வாழ்க்கையை வாழ நமக்கு எதிரிகளும் இருக்கக் கூடாது. வழக்குகளும் இருக்கக் கூடாது. பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் செய்த தவறுகளை மன்னித்து, விட்டு கொடுத்து சென்றாலே போதும். நிம்மதி தானாக தேடி வரும். மனப்பக்குவம் அடைய தினமும் நரசிம்மர் மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும்.