6 முக ருத்திராட்சம் பலன்கள்

6-muka-rudraksha

ருத்ராட்சம் என்பது ஒரு மூலிகை மரத்தின் காய்ந்த விதைகளாகும். இத்தகைய மரங்கள் குளிர்ந்த பகுதிகளில் குறிப்பாக இந்திய – நேபாள நாட்டின் இமய மலை பகுதிகளில் அதிகம் விளைகின்றன. ருத்ராட்சத்தின் முகம் எனப்படும் பிரிவுகள் எத்தனை இருக்கிறதோ அதற்கேற்ற சக்திகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில் 6 முக ருத்திராட்சம் பற்றியும், அதை அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


6 முக ருத்திராட்சம் பலன்கள்

ஆண்மை குறைபாடுகள்
உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

சிறுநீரக கோளாறுகள்

உடலில் இதயம் எவ்வளவு முக்கியமான உறுப்போ, அதே அளவிற்கு முக்கியத்துவம் மிக்க ஒரு உறுப்பாக சிறுநீரகங்கள் இருக்கிறது. சிறுநீரகங்கள் நன்கு செயல்படுவதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுக்க 6 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து நோய்கள் மற்றும் குறைபாடுகளும் நீங்கும்.

எலும்புகள்

- Advertisement -

உடலுக்கு ஆதாரமாக இருப்பதும், வலிமையை தருவதும் எலும்புகள் தான். ஆனால் ஒரு சில மனிதர்களுக்கு எலும்புகளில் உறுதித்தன்மை குறைவாக இருப்பதாலும், எலும்புகளில் ஏற்படும் சில குறைபாடுகளாலும் உடல் வலிமை குன்றும் நிலை உண்டாகிறது. 6 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது.

இளமை தோற்றம்

பலருக்கும் தங்களின் உடலில் எப்போதும் இளமை தன்மை நீடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கவே செய்கிறது. இதற்காக பலர் அழகு சாதன பொருட்களையும், பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகளையும் மேற்கொள்கின்றனர். 6 முக ருத்ராட்சத்திற்கு இளமை தோற்றத்தை அதிகரிக்க செய்யும் தாந்திரீக சக்தி அதிகம் உள்ளது. இதை அணிந்து கொள்ளும் நபர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல், தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி இளமை தோற்றத்தை நீட்டிக்க செய்யும்.

பயம்

பயம் அனைத்து உயிர்களுக்கு இருக்கும் ஒரு இயற்கையான உணர்வாகும். உயிர்வாழ்வதற்கு அடிப்படையான ஒரு உணர்வாக இது இருக்கிறது. ஆனால் இந்த பயஉணர்வு அதிகமாகும் போது, ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த கேடுகளை உண்டாக்குகிறது. பய உணர்வு நீங்க விரும்புபவர்கள் ஆறு முக ருத்திராட்சத்தை எப்போதும் தங்களின் உடலில் இருக்கும் வகையில் அணிந்து கொள்ள வேண்டும்.

கல்வி

6 முக ருத்ராட்சத்தை பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் அணிந்து கொள்வதால் அவர்களால் கல்வியில் நன்கு கவனம் செலுத்தி சிறந்த வெற்றிகளை பெற வழிவகுக்கும். ஆசிரியர்களும் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் தாங்கள் எடுக்கும் பாடங்கள் மாணவர்களுக்கு எளிதில் புரிவதுடன், மாணவர்கள் ஒழுக்கத்தோடு உங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

மன நோய்கள்

6 முக ருத்ராட்சம் பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு வஸ்துவாக இருக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறைகளால் பலருக்கும் மன அழுத்தங்கள் ஏற்பட்டு மன தளர்ச்சி, மன நிலை பாதிப்பு, ஞாபக மறதி போன்றவை ஏற்படுகிறன. 6 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மன நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட்டு ஞாபக மறதி, மன நோய்கள் போன்றவை அனைத்தும் முழுமையாக குணமாகும்.

செல்வங்கள் பெருக

உலகில் வாழ்வதற்கு அனைவரும் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவது அவசியம் ஆகும். சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும். அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட ஆறு முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே செல்லும்.

பொது வாழ்வில் வெற்றி பெற

முற்காலத்தில் உலகெங்கிலும் மன்னர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் ஆளும் மன்னராட்சி முறை இருந்தது. ஆனால் தற்காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்களின் ஜனநாயக ஆட்சி முறையே அதிக இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் அபிமானத்தை பெறுவதற்கும், தேர்தல்களில் வெற்றி பெறவும், பதவிகள் கிடைக்க பெறவும் ஆறு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிறந்த பலனை பெறலாம்.

பேச்சாற்றல்

உடலில் நரம்புகளின் குறைபாடுகளால் வார்த்தைகளை திக்கி திணறி பேசும் ஒரு நிலையை திக்குவாய் என்பார்கள். இப்பிரச்சனை உள்ளவர்களும் பேச்சாற்றலில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்புபவர்களும் 6 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வார்களேயானால் அவர்களின் குறைபாடுகளில் நீங்கி, அவர்களின் பேச்சாற்றல் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:
ஐந்து முகம் ருத்திராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 6 mukhi rudraksha benefits in Tamil. It is also called 6 mugam rudraksha in Tamil or 6 mugam rudraksha palangal in Tamil or 6 mugam rudraksha uses in Tamil or Aaru mugam rudhratcham in Tamil or Rudratcham 6 mugam in Tamil.