ஏழரை சனி பரிகாரம்

- Advertisement -

சனிபகவான் நீதி தேவன் என்பதால் பொதுவாக ஏழரை சனி காலம் என்றாலே ஒரு ஜாதகருக்கு அவரின் பாப கர்ம வினைகளுக்கேற்ப பாதகமான பலன்களை அதிகம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் ஏழரை சனியால் மிகவும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் சனி பகவான் அருளவாசிகளை பெற்று, பாதக பலன்களை குறைத்து நன்மைகள் அதிகம் ஏற்பட செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் ஒரு நபரின் ராசிக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் காலம் தான் ஏழரை சனி காலமாகும். அதாவது பிறந்த ராசிக்கு முந்தைய வீடான பனிரெண்டாம் வீட்டில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டு காலம், ஜென்ம ராசியில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம ராசிக்கு அடுத்த வீடான இரண்டாம் வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் என மொத்தம் ஏழரை ஆண்டு காலம் சனி பகவான் அந்த ராசியினருக்கு பலன்களை தருகிறார்.

- Advertisement -

ஏழரை சனி தாக்கம் குறைய பரிகாரம்

ஜாதகத்தில் ஏழரை சனி தொடங்கி அதன் பலன்களை அனுபவிப்பவர்கள் ஒரு கருப்பு நிற துணியில் 12 பாதாம் பருப்புகளை போட்டு, அந்த துணியை ஒரு கருப்பு நிற நூல் கொண்டு முடிச்சு போல கட்டி, ஒரு இரும்பு பாத்திரத்தில் போட்டு, உங்கள் வீட்டில் எப்பொழுதும் இருட்டாக இருக்கின்ற பகுதியில் வைக்க வேண்டும். பாதாம் பருப்புகள் நன்கு வதங்கி சுருங்கிய பிறகு பழைய பாதாம் பருப்புகளை அப்புறப்படுத்தி, 12 புதிய பாதாம் பருப்புகளை அதே கருப்பு துணியில் முடிச்சு போட்டு மேற்சொன்ன படி வீட்டின் இருண்ட பகுதியில் வைக்க வேண்டும். இந்த பரிகாரம் ஜாதகத்தில் உங்கள் ராசிக்கு சனி பகவான் 12 ஆம் வீட்டில் இருக்கின்ற காலத்தில் செய்ய வேண்டும்.

ஏழரை சனி நடை பெறுபவர்கள் ஏதேனும் ஒரு தேய்பிறை சனிக்கிழமை தினத்தன்று செம்பு, இரும்பு, கருப்பு எள், கருப்பு நிற போர்வை, கடுகு எண்ணெய், ஒரு ஜோடி செருப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை, வயதான முதியவருக்கு தானம் கொடுப்பதால் சனி பகவானின் அருள் கிடைத்து, ஏழரை சனி காலத்தில் அதிகளவு பாதக பலன்கள் ஏற்படாமல் காக்கும், அதேபோன்று சனிக்கிழமைகள் தோறும் தயிர் சாதம் படைத்து அதில் கருப்பு எள் கலந்து, ஏழை எளியவர்களுக்கு உணவாக கொடுப்பதும் ஏழரை சனி காலத்தில் கெடு பலன்கள் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

ஏழரை சனி காலத்தில் பாதக பலன் குறைந்து, சாதகமான பலன்களைப் பெற விரும்புபவர்கள் சனிக்கிழமைகளில் கருப்பு நிற நாய், கருப்பு நிற குதிரை, எருமை மாடு மற்றும் காகம் ஆகிய உயிரினங்களுக்கு உணவு கொடுத்து வர, சனி பகவானின் பரிபூரண அருளாசிகள் கிடைத்து நற்பலன்கள் அதிகம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கீழப்பெரும்பள்ளம் கேது கோவில்

புராணங்களின்படி சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்படாத தெய்வங்களாக கருதப்படுபவர்கள் விநாயகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் மட்டும் தான். எனவே சனிக்கிழமைகள் தோறும் விநாயகர், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் விநாயகர் துதி மற்றும் அனுமன் சாலிசா படித்து வருவதாலும் ஏழரை சனி காலத்தில் பாதகமான பலன் ஏற்படாமல் தடுக்கும் சிறந்த பரிகாரமாக திகழ்கிறது.

- Advertisement -