நாகதோஷம் பரிகார கோயில்கள் | Naga dosham pariharam temple in Tamil

naga dosham pariharam temple in tamil
- Advertisement -

நாகதோஷம் பரிகார கோயில்

நாகம் என்றால் பாம்பு எனப் பொருளாகும். ஜோதிட சாஸ்திரத்தில் ராகு – கேது ஆகிய இரு கிரகங்கள் பாம்பின் அம்சம் பொருந்தியதாக கருதப்படுகிறது. ராகு – கேது கிரகங்கள் ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான அமைப்பில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு நாக தோஷம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகத்தில் ஏற்படும் நாக தோஷத்தை போக்க பல நாக தோஷ பரிகார தல கோயில்கள் நம் நாட்டில் உள்ளன. அதில் மிகவும் பிரதானமான, ஆற்றல் வாய்ந்த நாகதோஷ பரிகார தல கோயில்கள் (Naga dosham pariharam temple in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

rahu

நாகதோஷம் பரிகார கோயில் 1

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ காளஹத்தீஸ்வரர் – ஞானப்பிரசுராம்பிகை உடனுறை திருக்கோயில். சிவபெருமானுடைய பஞ்சபூத சிவத்தலங்களில் வாயு எனப்படும் காற்று பஞ்சபூத தன்மையைக் கொண்ட சிவலிங்கம், கோயிலின் மூலவர் தெய்வமாக உள்ளது. ஜாதகத்தில் பொதுவாக ராகு – கேது ஆகிய கிரகங்கள் மற்ற கிரகங்களை காட்டிலும் வலிமை வாய்ந்ததாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த ராகு கேது ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருப்பின் அவருக்கு நாக தோஷம், சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் ஏற்படுகின்றன.

- Advertisement -

ராகு – கேது ஆகிய கிரகங்களின் தோஷங்களை போக்குவதற்குரிய சிறந்த பரிகார தலமாக இந்த திருகாளஹத்தி கோயில் திகழ்கின்றது, ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராகு – கேது கிரகங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஏழு நாட்களிலும் ஒவ்வொரு கிழமை என்றும் வருகின்ற ராகு கால நேரத்தில் நாக தோஷசத்திற்குரிய பரிகார பூஜைகளை இந்த கோயிலில் செய்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும் என கூறப்படுகின்றது.

நாகதோஷம் பரிகார கோயில் 2

சென்னை அருகே இருக்கின்ற பூவிருந்தவல்லி எனும் ஊரில் அமைந்துள்ளது திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோயில். கோயிலின் மூலவர் தெய்வமாகிய ஸ்ரீதேவி கருமாரி அம்மன் நாக வடிவத்திலும், அம்பிகை ரூபத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இக்கோயிலில் பாம்பு புற்று வழிபாடு பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

- Advertisement -

ஜாதகத்தில் ராகு – கேது கிரக தோஷங்கள் இருப்பவர்கள் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட்ட பிறகு, அம்பாளின் சன்னதிக்கு அருகிலேயே இருக்கின்ற பாம்பு புற்றிற்கு பசும்பால் ஊற்றியும், குங்கும அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்வதால் அவர்களின் ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களின் பாதகமான அமைப்பினால் ஏற்படுகின்ற நாக தோஷம் பாதிப்புகள் குறைந்து, வாழ்வில் நற்பலன்கள் உண்டாகும்.

நாகதோஷம் பரிகார கோயில் 3

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் அடுத்த மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி – சௌந்தரநாயகி உடனுறை திருக்கோயிலாகும். இக்கோயில் நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது ஜாதகத்தில் கேது கிரகத்தின் பாதகமான அமைப்பால் ஏற்படுகின்ற நாக தோஷம் தீர, இத் தலத்திற்கு வந்து முதலில் இக்கோயிலின் திருக்குளத்தில் நீராட வேண்டும்.

- Advertisement -

பின்பு புத்தாடைகளை அணிந்து கோயிலின் தெய்வமான நாகநாத சுவாமியையும் சௌந்தரனாயகி அம்பாளையும் வழிபாடு செய்த பிறகு, கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற நாக தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.

keelaperumpallam kethu temple in tamil

Naga dosham pariharam temple in Tamil

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் அருள்மிகு திருப்பாம்புரநாதர் பிரம்மராம்பிகை உடனுறை திருக்கோயில். திருகாளஹத்தி, திருநாகேஸ்வரம் போன்ற கோயில்களில் வழிபாடு செய்ய முடியாதவர்கள், இந்த திருப்பாம்புரம் கோயிலில் ராகு – கேது பரிகார பூஜை செய்து கொண்டாலே மற்ற ராகு – கேது கிரக பரிகார கோயில்களில் பரிகார பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என இக்கோயிலின் தலபுராணம் கூறுகின்றது.

கோயிலுக்கு முன்பாக இருக்கின்ற ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடிய பிறகு கோயிலுக்குள்ளாக சென்று, முறைப்படி ராகு – கேது பரிகார பூஜை செய்து கொள்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற கடுமையான நாக தோஷத்தின் (Naga dosham pariharam temple in Tamil) வீரியத் தன்மை குறைந்து, வாழ்வில் நற்பலன்கள் ஏற்படும் எனக் கூறுகின்றனர்.

- Advertisement -