7 முக ருத்ராட்சம் பலன்கள்

7-mukha-rudhraksha

விஞ்ஞான பூர்வமான பல நடைமுறைகளை கொண்டது இந்து மதம். இதில் இருக்கும் நடைமுறைகள் அனைத்திற்குமே பல வகையான பலன்கள் இருக்கும். சிவனை முழுமுதல் கடவுளாக வழிபடும் சிவயோகிகள், துறவிகள் மற்றும் தீவிர பக்தர்கள் அணிந்து கொள்ளும் சிவகடாட்சம் கொண்ட ஒரு அணிகலன் தான் ருத்ராட்சம். இதில் “7 முக ருத்ராட்சம்” அணிவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

7-mukha-rudhraksha

7 முக ருத்ராட்சம் பலன்கள்

ரத்த புற்று நோய்
புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. அதில் ரத்தத்தில் இருக்கும் தீங்கான வெள்ளை அணுக்களின் அதீத உற்பத்தியால் ஏற்படும் லூக்கிமியா எனப்படும் ரத்த புற்று நோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருந்து வருகிறது. சிவனை வணங்கி 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் ரத்த புற்று ஏற்படாமல் தடுக்கவும், நோய் பாதித்திருப்பின் அது சீக்கிரம் குணமாகவும் செய்கிறது.

மன அமைதி

மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

7 muka rudraksha

- Advertisement -

கணவன் – மனைவி

ஆண் – பெண் இருவரின் மனமும் முழுவதுமாக ஒன்றாக கலப்பது தான் திருமண வாழ்வின் வெற்றியை குறிக்கும் அறிகுறியாகும். ஆனால் ஒரு சில தம்பதிகள் விடயங்களில் கணவன் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவனுக்கோ ஈர்ப்பில்லாமல் இருக்கும் இத்தகைய நபர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதார மந்த நிலை

அனைவருமே வாழ்வில் அத்தியாவசிய தேவையான பணத்தை ஈட்டுவதற்கு எதாவது ஒரு வேலைக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு தொழிலோ அல்லது வியாபாரமா செய்கின்றோம். சமயங்களில் நமக்கு பணவரவு நன்றாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் வீண் செலவீனங்களும் ஏற்படவே செய்கின்றன. 7 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு இத்தகைய வீண் செலவுகள் கட்டுக்குள் வந்து, அதிக பணவரவு உண்டாக்கும்.

7Mukhi

உயிர்காப்பு

மனித பிறவி என்பது மிகவும் உன்னதமான பிறவியாகும். எந்த ஒரு மனிதனுக்கும் தனது மரணம் எப்போது நிகழும் என்று கூற முடியாது. ஆனால் பல மக்களை காக்க எந்த ஒரு நொடி பொழுதும் தங்களுக்கு மரணம் ஏற்படும் ஆபத்தான வேலைகளான ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை போன்றவற்றில் சேவை செய்பவர்கள் மற்றும் பிற ஆபத்தான பணிகளை புரிபவர்கள் 7 முக ருத்ராட்சத்தை சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து அணிந்து கொள்வதால் நொடி தங்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து இந்த 7 முக ருத்ராட்சம் காக்கும்.

எழுத்து, பேச்சு திறன்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும், கல்வி கற்பதற்கும் அவசியமாக இருப்பது மொழி. அன்றாட வாழ்வில் மொழி அனைத்திற்கும் அவசியமாகும். ஆனால் சிலர் அந்த மொழியில் புலமை பெற்று சமூகத்திற்கு பயன்படும் பேச்சுகள் மற்றும் எழுத்துகளை தந்து மிகவும் புகழ் பெறுகின்றனர். எழுத்தாளர்கள், பேச்சாளர்களாக ஆக நினைப்பவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் இத்துறைகளில் செல்வமும், புகழும் அதிகம் பெறலாம்.

7-mukha-rudhraksha

ஆண்மை குறைபாடுகள்

உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

எலும்புகள்

உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதும் எலும்புகள் தான். ஆனால் ஒரு சில மனிதர்களுக்கு எலும்புகளில் உறுதித்தன்மை குறைவாக இருப்பதாலும், எலும்புகளில் ஏற்படும் சில குறைபாடுகளாலும் உடல் வலிமை குன்றும் நிலை உண்டாகிறது. அதிலும் பெண்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. 7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது.

7 muka rudraksha

சுவாச நோய்கள்

நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்பட்ட நபர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி, சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

செரிமான பிரச்சனைகள்

சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை சிலருக்கு உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகள் 7 முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு சீக்கிரத்தில் தெரிகிறது. இந்த ருத்ராட்சம் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீர்ந்து உடல் ஆரோக்கியத்தையும், மனதில் இதனால் ஏற்படும் எரிச்சல், கோப குணங்களையும் தீர்க்கிறது.

இதையும் படிக்கலாமே:
6 முக ருத்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 7 mukhi rudraksha benefits in Tamil. It is also called 7 muga ruthratcham in Tamil or 7 faced rudraksha uses in Tamil or 7 mugam rudraksha in Tamil.