உங்களை கோடீஸ்வரராக விடாமல் தடுக்கும் எந்த ஒரு கண்திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஓட ஓட விரட்ட 7 சின்ன வெங்காயம் போதும்.

kan thirusti

நம்முடைய தொடர் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு கெட்ட சக்தி இருக்கிறது என்றால், அது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் தான். எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைபடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் சிலரின் முன்னேற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதாவது குறிப்பாக கண்ணுக்கு தெரியாதவர்கள் வளர்ச்சி அடைந்தால் அதில் நாம் பொறாமை கொள்ள மாட்டோம். நம்முடன் இருப்பவர், நம்முடன் பணிபுரிபவர், நம்முடைய சொந்தக்காரர், நம்மை விட அதிவேகமாக முன்னேற்றம் அடைகிறார் என்றால் நம் மனதில் சிறு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிடும். ‘இவரும் நம்மை போலவே தானே இருந்தார். ஆனால் இவரால் மட்டும் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அதிவேக முன்னேற்றத்தை அடைய முடிகிறது’ ‘இப்படியே இருந்தால் இவர் கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ’! என்று உங்களுடைய வளர்ச்சியை கண்டு பெருமூச்சு விட்டாலே போதும். உங்களால் அன்றிலிருந்து அதி வேகமாக செயல்பட முடியாமல் போய்விடும். சோம்பேறித்தனம் ஏற்படும். கண்களில் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். கொட்டாவி இருக்கும். வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் இதற்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் கண்திருஷ்டி ஆகத்தான் இருக்கும்.

money

அடுத்தவரின் கண் திருஷ்டியால் மட்டும் தான் இப்படி ஏற்படும் என்பதை ஊர்ஜிதமாக கூறிவிட முடியாது. அடுத்தவர்கள் தங்களுடைய கண் திருஷ்டியை  கழித்து முச்சந்தி, 4ரோடு இப்படிப்பட்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள். அதை தெரியாமல் நீங்கள் மிதித்து விட்டாலோ, தாண்டி விட்டாலும் அந்தக் கழிப்பானது உங்களை வந்து பிடித்துவிடும். இதுவும் ஒரு கோளாறு தான். இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நாம் சுலபமாக நீக்கிவிட ஒரு தந்திரம் உள்ளது. அந்த தந்திரத்தை ஏழு சின்ன வெங்காயத்தை வைத்து எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் 7 பல் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக 7 பல் சின்ன வெங்காயம் மட்டும். உங்களது உள்ளங்கையில் சிறிய பேப்பர் அல்லது துணியையோ வைத்து அதன் மேல் ஏழு சின்ன வெங்காயம் களையும் வைத்து விட்டு, அதன்பின் அது கீழே விழாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயமானது உங்களது உடலை உரச கூடாது. சின்ன வெங்காயத்தை உடலில் படாமல் தலையிலிருந்து கால் வரை, மேலிருந்து கீழ் பக்கமாக ஐந்து முறை ஏற்றி இறக்க வேண்டும். அதாவது நம் உடம்பில் இருக்கும் திருஷ்டியானது நம் கால் வழியாக வெளியே செல்லும் என்று கூறுவார்கள் அல்லவா? அப்படி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பிறகு கையில் பேப்பரில் வைத்திருக்கும் அந்த சின்ன வெங்காயத்தை அப்படியே மடித்து முச்சந்தி அல்லது நான்கு சந்து ரோடு, இந்த இடத்தில் தூக்கி வீசி விடலாம். எப்போதும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த பொருளை வைத்து திருஷ்டியை கழிக்கின்றோமோ, அந்த பொருள் உங்களது உடம்பை உரசாமல் இருப்பது நல்லது.

onion

இந்தப் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று செய்தால் நல்ல பலன் தரும். உங்களுக்கு இருக்கும் கண்திருஷ்டி கோளாறாக இருந்தாலும், அடுத்த வருவது கழிப்பில் நீங்கள் சிக்கி இருந்தாலும், அந்த பிரச்சனைகள் அனைத்தும் அந்த சின்ன வெங்காயத்துடன் சென்றுவிடும். இந்த பரிகாரத்தை இரவு நேரங்களிலும் செய்யலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையோடு செய்து பார்த்தால் பலன் நிச்சயம். மந்திர தந்திரங்கள் எதுவும் இல்லை. உப்பு சுற்றி போடுவது போல், வெங்காயத்தை சுற்றி போடுகின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

தொழிலில் முடக்கம், பணச் சிக்கல், கடன் தொல்லை, வருமானத்தில் தடை, குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் இன்மை இப்படிப்பட்ட பிரச்சனைகளும் கண் திருஷ்டியால் ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு வருமானம் நன்றாக வந்துகொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக எதனால் கஷ்டம் ஏற்பட்டது என்பதை தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
மற்றவர்களிடமிருந்து இந்தப் பொருட்களை இரவலாகவோ, கடனாகவோ வாங்கக்கூடாது. விபரீத விளைவுகள் கூட ஏற்பட்டு விடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have ketta sakthi. Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti pariharam Tamil