முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி கவசம், சிவபெருமானுக்கு சிவபுராணம், விநாயகருக்கு விநாயகர் அகவல், அனுமனுக்கு அனுமன் சாலிசா. இதுபோல ஒவ்வொரு தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெறவும் நமக்கு ஒவ்வொரு விதமான பாடல்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல விஷ்ணு பகவான் வழிபாடு செய்பவர்களுக்கெல்லாம் தெரியும்.
இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கக்கூடிய சிறப்பு என்ன என்பது. தினமும் உங்களுடைய வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்க விட்டாலே வாழ்வில் துன்பங்கள் விலகிவிடும். ஏனென்றால் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கும் ஆயிர நாமத்திற்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு கஷ்டத்தையும் விளக்கக்கூடிய சக்தி விஷ்ணு சகஸ்ர நாமத்தில் மறைந்துள்ளது.
விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வார்த்தையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஒரு வார்த்தையை நாம் உச்சரிக்கும் போது, நமக்கு வந்த கஷ்டங்கள் உடனடியாக விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. தாங்கவே முடியாத கஷ்டத்தை தாங்கிக் கொள்வதற்கும் ஒரு மனம் தேவை.
சில பேர் கஷ்டம் வந்த உடனேயே துவண்டு விடுவார்கள். ஆனால் அப்படி தூண்டு போகக்கூடாது. கஷ்டத்தை எதிர்த்து போராடக்கூடிய குணம் ஒரு மனிதனுக்கு தேவை. அப்போதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எதிர்ப்பாராத கஷ்டம் வந்துவிட்டது. எதிர்பாராத இழப்பு நேர்ந்து விட்டது. அதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டதா.
கிடையாது, அடுத்தது என்ன என்பதை சிந்திக்கும் திறன் ஒருவனுக்கு வேண்டும். அடுத்தடுத்து வரக்கூடிய கஷ்டங்களை தாங்கக்கூடிய பலம் ஒருவனுக்கு வேண்டும் என்றால், விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இந்த ஒரு வார்த்தையை நின்ற இடத்தில் இருந்தே சொல்லுங்கள். அது என்ன வார்த்தை தெரியுமா. ‘வஹ்னிஹ்’ என்ற வார்த்தையை சொல்ல வேண்டும் இந்த வார்த்தைக்கு உண்டான அர்த்தம் நெருப்பு.
கஷ்டம் வரும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் வஹ்னயே நமஹ ! என்று இந்த வார்த்தையை மந்திரமாக கூட நாம் உச்சரிக்கலாம். இந்த இரண்டில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ, அந்த மந்திர வார்த்தையை மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். இந்த வார்த்தை விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரக்கூடிய ஒரு வார்த்தை. விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமத்தில் இதுவும் ஒன்று. பெரிய அளவில் வந்த கஷ்டங்கள் எல்லாம் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி போகும். அந்தக் கஷ்டத்தை தாங்க கூடிய சக்தி தெம்பு உங்களுக்கு வந்துவிடும்.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத் தலைவனுக்கு எதிர்பாராமல் இன்று வேலை போய் விட்டது. இந்த மாத சம்பளமும் வராது, ஆனால் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும், வீட்டில் பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள், அரிசி பருப்பு வாங்க வேண்டும், கடன் கூட வாங்க முடியாத சூழ்நிலை, இப்படி நெருக்கடியான சமயத்தில் சிக்கிக் கொண்டால் ஒரு மனிதன் என்ன செய்ய முடியும்.
இதையும் படிக்கலாமே: 8-12-2024 வளர்பிறை அஷ்டமி வழிபாடு
துவண்டு போவான் அல்லவா. அந்த சமயத்தில் பெருமாளை நினைத்து, பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், இருந்த இடத்திலிருந்து இந்த நாமத்தை சொல்லுங்கள். பெருமாள் உங்களை தேடி வந்து உதவியை செய்து விட்டு செல்வார். நம்பிக்கையோடு இந்த மந்திர வார்த்தையை சொல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் கிடையாது. பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையில் இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷமடைந்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.