8 முக ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

8-mukhi-rudhraksha

நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்களில் ஆன்மீகமும், அறிவியலும் சேர்ந்தே இருந்தன. அப்படி அவர்கள் அதிகம் உபயோகித்த ஒரு தெய்வீகமான பொருள் தான் ருத்ராட்சம் ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. அதில் “8 முக ருத்ராட்சம்” பயான்படுத்துவதால் நாம் அடையும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

8 முக ருத்ராட்சம் நன்மைகள்

விநாயகர் அருள்
நம் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கல்கள், வினைகள் ஆகியவற்றை தீர்க்கும் தெய்வமாக விநாயகர் இருக்கிறார். எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிப்பட்ட பிறகு அதை தொடங்கினால் அக்காரியம் மிக சிறந்த வெற்றியடையும். எனவே விநாயகர் அருள் எப்போதும் தங்களுக்கு கிடைக்க விரும்பும் நபர்கள் 8 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது.

ராகு பகவான்

நவகிரகங்களில் பாம்பின் உருவ அமைப்பு கொண்ட நிழல் கிரகங்கள் ராகு மற்றும் கேது கிரகங்கள் ஆகும். இதில் ராகு பகவான் ஒரு மனிதனின் நோய்கள் அண்டாத உடல் ஆரோக்கியம், எதிரிகளை வெற்றி கொள்ளும் திறன் ஆகியவற்றிற்கு காரகனாக இருக்கிறார். எனவே ராகு பகவானின் நன்மையான பலன்களை பெற விரும்புபவர்கள் 8 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

திடீர் வீழ்ச்சி

செல்வம், புகழ், சமூக அந்தஸ்து ஆகியவை நிலையற்ற தன்மை கொண்டது. இன்று அனைத்து வளமைகளை பெற்று வாழும் நபர்கள், நாளையே அது அத்தனையையும் இழந்து விடக்கூடிய திடீர் வீழ்ச்சி நிலை சிலருக்கு உண்டாவதை நாம் பார்த்திருப்போம். 8 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு இத்தகைய வீழ்ச்சி நிலை ஏற்படாமல் காக்கும். எப்போதும் வளம் குன்றாத வாழ்க்கை நீடிக்கும்.

விஷ ஜந்துகள்

பல வகையான உயிர்கள் வாழும் இந்த பூமியில், பற்களில் கொல்லும் தன்மை கொண்ட பாம்புகள் பெரும்பாலான மனிதர்கள் வாழும் பகுதிகளில் இருக்கின்றன. காடுகள் அழிந்து, நகரங்கள் பெருகுவதால் பல மக்கள் விஷத்தன்மை கொண்ட பாம்புகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. விஷ பாம்புகள் உங்களை நெருங்காமல், தீண்டாமல் செய்யும் மந்திர சக்தி 8 முக ருத்ராட்சம் பெற்றிருக்கிறது. இதை அணிந்து கொள்பவர்களுக்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் ஏற்படும் ஆபத்து நீங்கும்.

பிராஸ்ட்ரேட் சுரப்பி

ஆண்கள் அனைவருக்கும் அவர்களின் குதத்திற்கு உட்புறமாக இருக்கும் தசையில் அந்தரங்க உறுப்புக்கு கீழ்ப்பகுதில் இருக்கின்ற ஒரு சுரப்பி தான் பிராஸ்ட்ரேட் சுரப்பி. இந்த சுரப்பி ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சில ஆண்களுக்கு பிராஸ்ட்ரேட் சுரப்பி பாதிப்படைந்து அங்கு புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதை தடுக்க நினைப்பவர்கள் 8 முக ருட்ராட்சம் அணிந்து கொள்ள சிறந்த பலன் கிடைக்கும்.

பாவங்கள்

விழிப்புணர்வு தன்மை கொண்ட மனிதர்கள் எப்போதும் தவறு செய்வதில்லை, அதனால் அவர்களுக்கு பாப வினைகள் என்பது இல்லை. ஆனால் உலகில் இருக்கும் 99 சதவீத மக்கள் விழிப்புணர்வின்றி செயலாற்றும் மக்களாகவே இருக்கின்றனர். எனவே இவர்கள் அன்றாட வாழ்வில் தங்களை அறியாமல் பல பாவங்களை செய்கின்றனர். இப்படி அறியாமல் செய்யப்படும் பாவ வினைகளிலிருந்து 8 முக ருத்ராட்சம் ஒருவரை காக்கும்.

சுவாச நோய்கள்

நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்பட்ட நபர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் 8 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்பு, அசுத்தங்கள் நீங்கி, சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகள்

சிலருக்கு எப்போதும் உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகள் 8 முகம் ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு சீக்கிரத்தில் தெரிகிறது. இந்த ருத்ராட்சம் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனை, மூலம் போன்ற பிரச்சனைகளையும் விரைவில் தீர்க்கிறது.

எலும்புகள்

ஒரு சில மனிதர்களுக்கு எலும்புகளில் உறுதித்தன்மை குறைவாக இருப்பதாலும், எலும்புகளில் ஏற்படும் சில குறைபாடுகளாலும் உடல் வலிமை குன்றும் நிலை உண்டாகிறது. அதிலும் பெண்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. 8 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது.

மன அமைதி

மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 8 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே:
பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 8 mukhi rudraksha benefits in Tamil. It is also called as 8 mukhi rudraksha in Tamil or Rudraksha nanmaigal in Tamil or 8 face ruthratcham in Tamil.