எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாக விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் அவரை முழு முதற்கடவுள் என்று கூறுகிறோம். அப்படி விநாயகரை வழிபாடு செய்துவிட்டு நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அந்த செயலில் தடைகள் எதுவும் ஏற்படாது, சிறப்பாக அந்த செயல் நடைபெறும் என்று பொருள்படும். அப்படிப்பட்ட விநாயகரை நாம் பலவிதங்களில் வழிபாடு செய்யலாம், பலவிதமான வேண்டுதலுக்காகவும் வழிபாடு செய்யலாம். நம்முடைய எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கு எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எதிரிகள் தொல்லை விலக வழிபாடு
எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நாம் அனைவருமே நினைப்போம். அப்படி வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேறி விட்டோம் என்றால் நம்மை அறியாமலேயே நமக்கு எதிரிகள் உண்டாகி விடுவார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரிந்தவர்களாகவும் இருக்கலாம் தெரியாதவர்களாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட எதிரிகள் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யும் வகையில் ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொள்வார்கள். அதனால் நம்முடைய முன்னேற்றமும் தடைப்படும். ஒரு சிலருக்கு அவர்களுடைய வாழ்க்கையே மாறும் நிலை கூட ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய எதிரிகள் அவர்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
இந்த வழிபாட்டை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் விநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி, திங்கட்கிழமை, புதன்கிழமை போன்ற நாட்களில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு கல் உப்பு வேண்டும். என்றைக்கு நாம் இந்த வழிபாட்டை செய்கிறோமோ அதற்கு முதல் நாளில் கல் உப்பை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தண்ணீரை தெளித்து அந்த கல்லுப்பை நன்றாக அழுத்தி பிடித்து பிள்ளையாராக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு பிள்ளையாரை ஒரு தட்டில் வைத்து அந்த பிள்ளையாருக்கு குங்குமத்தை வைத்து விட்டு ஏதாவது ஒரு மலரை சாற்றி கொள்ளுங்கள். பிறகு அவருக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது விநாயகப் பெருமானின் மந்திரமான “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு உங்கள் வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை நீங்கி, மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும் என்று முழுமனதோடு விநாய பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை 48 நிமிடம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்த வழிபாட்டின் பலனை முழுமையாக பெற முடியும். 48 நிமிடம் நிறைவடைந்த பிறகு அந்த உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். எப்படி உப்பு தண்ணீரில் கரைந்து ஒன்றுமில்லாமல் போகிறதோ அதே போல் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த எதிரிகளும் காணாமல் போய்விடுவார்கள்.
இதையும் படிக்கலாமே:குலதெய்வம் நம்முடன் இருக்க
மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பை வைத்து இந்த முறையில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளே இல்லாத வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.