- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval9 நாள் தைப்பூச விரதம் கடைபிடிக்கும் முறை

9 நாள் தைப்பூச விரதம் கடைபிடிக்கும் முறை

- Advertisement -

பிப்ரவரி 11ஆம் தேதி முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள் வரவிருக்கிறது. முருகன் கோவிலில் எல்லாம் இந்த தைப்பூசம் திருவிழா கோலமாக நடக்கும். நிறைய பேர் தைப்பூசத்திற்காக 48 நாள் விரதம், 21 நாள் விரதம் கடைபிடித்து வருவார்கள். இன்னும் நீங்கள் தைப்பூச விரதத்தை துவங்கவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி, சஷ்டி திதி இருக்கிறது. அன்றிலிருந்து உங்களுடைய விரோதத்தை துவங்குங்கள். பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, ஒன்பது நாட்களுடன் உங்களுடைய விரதம் நிறைவடையும். ஒன்பது, செவ்வாய் பகவானுக்கு உரிய எண். இது ஒரு அதிர்ஷ்ட எண். மூன்று என்பதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய எண் தான்.

- Advertisement -

ஆக மூன்றாம் தேதி துவங்கும் விரதம் மற்றும் இந்த ஒன்பது நாளும் உங்களுடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும். முருகனை நினைத்து பின் சொல்லக்கூடிய முறைப்படி இந்த ஒன்பது நாளும் நீங்கள் விரதத்தை மேற்கொண்டால் முருகன் உங்களுடன் இருப்பதை உணர முடியும்.

ஒன்பது நாள் தைப்பூச விரதம்

உங்களை வருத்திக்கொண்டு மூன்று வேலை சாப்பிடாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூன்றாம் தேதி முதல், முருகனுக்காக அசைவம் சாப்பிடாமல் இருங்கள். அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேசாதீர்கள். வீட்டை சுத்தபத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் மனதார கூட நினைத்து பார்க்காதீர்கள். முருகா முருகா என்ற நாமத்தை மட்டும் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து முருகனுக்கு விளக்கு ஏற்றி, முருகன் பாடலை பாடலாம், அல்லது வீட்டில் கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விடலாம். கந்த குரு கவசம், முருகனுக்கு பிடித்த வேல்மாறல் இப்படி எந்த பாடலை ஒலிக்கவிட்டாலும் சரிதான். இருந்தாலும் கந்த சஷ்டி கவசத்திற்கு ஒரு தனி பவர் இருக்குது. அது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆக இந்த விரதம் இருக்கும் ஒன்பது நாளும், ஒரு நாளுக்கு ஒருமுறை, கந்த சஷ்டி கவசத்தை காதால் கேட்பது புண்ணியத்தை தரும். இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும். அந்த நாள் முழுவதும் நம்மோடு முருகன் பயணம் செய்வதாக நம்மால் உணர முடியும்.

முடிந்தவர்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இப்படி ஒன்பது நாட்களும் முருகனுடைய நினைப்போடு, முருகனுடைய பாடலை கேட்டு, அரோகரா முருகா என்ற நாமத்தை மனமுருக சொல்லி, இந்த முருக விருதத்தை கடைப்பிடித்தாலே போதும். முருகப்பெருமானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

முழு நேரமும் முருகர் வழிபாட்டை நிச்சயம் செய்ய முடியாது. அவர் அவருக்கு வேலை இருக்கும். வேலையை விட்டுவிட்டு முருகரை வழிபாடு செய்தால் அந்த வழிபாடு முருகனுக்கு கோபத்தை கொடுக்கும். நம்முடைய கடமையும் வேலையும் தான் நமக்கு முதல் கண்ணாக இருக்க வேண்டும். அதிலேயே நாம் ஒருவரை காணலாம்.

வேலை செய்தது போக மிச்சம் இருக்கும் நேரத்தில் இந்த ஒன்பது நாள் மட்டும் முருகனுக்காக ஒதுக்க வையுங்கள். நல்லதே நடக்கும். வரக்கூடிய தைப்பூசத் திருநாளன்று நீங்கள் முருகனிடம் வைக்க வேண்டுதல் அப்படியே நடக்கும். தைப்பூசத்தன்று மட்டும் ஒரு வேலை, ஒரு பொழுதும் அல்லது ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தோ, பால்பழம் சாப்பிட்டோ, வெறும் தண்ணீரை குடித்தோ உங்களுடைய நன்றியை முருகனுக்கு தெரிவிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: 2-2-2025 வளர்பிறை சதுர்த்தி திதி வழிபாடு

வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு தைப்பூசத் திருநாள் அன்று சென்று உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, பூ வாங்கி கொடுத்து, உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. எவ்வளவு எளிமையாக வழிபாடு. முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்யும்போது முழு பலனை விரைவாக அடைய முடியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்