எல்லோருக்கும் நினைத்த மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. சிலருக்கு தான் எதிர்பார்த்த சில விஷயங்களுக்கு மேலான விஷயங்கள் கிடைத்து ஆச்சரியப்பட வைக்கும். ஆனால் சிலருக்கோ, தான் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான சில விஷயங்கள் நடந்து வாழ்க்கையில் விரக்தி அடைய செய்யும். இன்னும் சிலருக்கு நினைத்த ஒன்று கூட நடக்காமல், தலையெழுத்தே சரியில்லை என்பது போல இருக்கும். இப்படி தலையெழுத்தே சரியில்லை என்பவர்கள், இந்த மந்திரத்தை சொன்னால் என்ன நடக்கும்? என்பதை ஆன்மீகம் சார்ந்த இப்பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நான் வாங்கி வந்த வரம் அப்படித்தான் இருக்கிறது. எனக்கு மட்டும் மற்றவர்களைப் போல சாதாரண விஷயம் கூட கிடைப்பதில்லை. எதார்த்தமான ஒரு வாழ்க்கையை என்னால் வாழ முடியவில்லை. நான் நினைத்த ஒன்று கூட எனக்கு நடந்தது கிடையாது. இன்று மாறிவிடும், பிறகு மாறிவிடும் என்று கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு, காலத்தை நகர்த்து கொண்டிருக்கிறேன் என்றாலும், என் தலையெழுத்து மட்டும் மாறிய பாடில்லை என்பவர்கள், அந்த பிரம்ம தேவனின் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் தலை எழுத்தை எழுதுபவர் பிரம்மதேவர். இது தான் அவர்களுக்கு நடக்க வேண்டும் என்பது பிரம்மதேவர் ஏற்கனவே எழுதி வைத்த ஒன்றாகும். ஒருவருடைய தலையெழுத்தை பிரம்மன் எழுதிய பின்பு அதை மாற்றி எழுதுவாரா? என்னும் கேள்விக்கு விடை தெரியாமல் பலரும் இருப்போம். எழுதிய தலையெழுத்தை மாற்றும் சக்தி வழிபாடு மற்றும் மந்திரத்திற்கு உண்டு.
என்னதான் கோணல் மாணலாக நம் தலையெழுத்தை எழுதி வைத்திருந்தாலும், அதை மாற்றும் சக்தி இந்த வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கும். பிரம்மருக்கு உகந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பிரம்ம வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பிரம்ம தேவருக்கு தனி கோயில்கள் கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கை, கால், முகத்தை அலம்பி விட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து பிரம்ம தேவரை மனதில் நினைத்து தன் தலையெழுத்து மாற்றி எழுதும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எழுந்து வழிபடும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். அதே போல நம் வாழ்க்கை மங்களகரமாக, செழிப்பாக இருக்க செய்யக் கூடியவர் குருபகவான்.
இந்த குரு பகவானுக்கு அதி தேவதையாக இருப்பவர் பிரம்ம தேவர். எனவே குரு பகவானுக்கு உகந்த வியாழன் கிழமையில் பிரம்ம தேவரை வழிபட வேண்டும். வியாழன் கிழமையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குருபகவானையும், பிரம்ம தேவரையும் மனதில் நினைத்து தலையெழுத்து மாற வேண்டும், என் வாழ்க்கை நிலை சரியாக வேண்டும், நான் என்ன பாவம் செய்திருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள், நான் எது நினைத்தாலும், அது வேறொன்றாக நடக்கிறது. என்னுடைய இந்த தலையெழுத்தை மாற்றி அமைக்க பிரார்த்திக்கிறேன் என்று பிரார்த்தித்து கீழ் வரும் இந்த பிரம்ம காயத்ரி மந்திரத்தை 21 முறை உச்சரியுங்கள். நிச்சயம் தலைகீழாக இருக்கும் உங்கள் வாழ்க்கை நிலை எல்லோரைப் போலவும் சராசரியாகவும், எதார்த்தமானதாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும், மன நிம்மதியை கொடுப்பதாகவும் மாற்றம் அடையும்.
இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரதத்தை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு
பிரம்ம காயத்ரி மந்திரம்:
ஓம் வேதாத்மகாய வித்மஹே,
ஹரண்ய கர்ப்பாய தீமஹி,
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!!!