வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்த காய்கறி கழிவுகள், அரிசி களைந்த தண்ணீர் போன்றவை தான் முக்கியமான உரங்கள். (இந்த முறை தெரியவில்லை என்றால் இந்த பதிவில் அதைவிட எளிமையான முறை உள்ளது தெரிந்து கொல்லுங்கள்) அப்படி காய்கறி கழிவுகளை நாம் உரமாக மாற்ற டீ கம்போஸ்ட் முறையை தான் பயன்படுத்துவோம். அதை சேமித்து புளிக்க வைத்து தான் செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும் சிலருக்கு அதன் புளித்த வாடை பிடிப்பதில்லை. இதற்காகவே பெரும்பாலனோர் இந்த முறையை தவிர்த்து விடுகிறார்கள். இனி அப்படி இந்த காய்கறி கழிவுகளை ஒதுக்காமல், உடனே உரமாக்கி செடிகளுக்கு கொடுக்க முடியும். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த முறையை செய்வதற்கு நமக்கு இரண்டு பிளாஸ்டிக் பாட்டில் தேவை, கம்பியை சூடு செய்து பாட்டிலின் மூடியில் சிறு சிறு துளைகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் பயன்படுத்துவதால் அதிகமான தண்ணீர் சேரப் போவதில்லை எனவே இதற்கு அரை லிட்டர் பாட்டில் இருந்தாலும் கூட போதும்.
காலையில் சமைக்கும் போது அரிசி, பருப்பு போன்றவைகள் கழுவிய தண்ணீரை தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் காய்கறி கழிவுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, காய்கறிகள் அலசும் தண்ணீரையும் அதில் ஊற்றி இதையும் அப்படியே தனியாக இன்னொரு பாட்டில் ஊற்றி வைத்து விடுங்கள். இதை காலையில் ஒரு பத்து மணிக்குள் தயார் செய்து அப்படியே வைத்து விடுங்கள்.
மாலை கொஞ்சம் வெயில் இறங்கிய பிறகு உங்கள் செடிகளுக்கு இந்த தண்ணீரை அப்படியே ஸ்ப்ரே செய்து விடுங்கள் போதும். காலையில் ஊற்றி உடனே மாலையிலே தெளிக்கும் போது கண்டிப்பாக அதில் அந்த அளவிற்கு குளித்த வாடை வராது லேசாக தான் புளித்திருக்கும்.
இது அதிகம் புளிக்காத தண்ணீர் என்பதால் அதில் எதையும் கலக்காமல் அப்படியே கூட தெளிக்கலாம். நீங்கள் முதலில் செடிகளுக்கு கொஞ்சமாக இந்த ஸ்ப்ரே அடித்து பாருங்கள் செடிகள் லேசாக நிறம் மாறுவது போல் தெரிந்தால் அதில் இன்னும் கொஞ்சம் நீங்கள் தண்ணீர் கலந்து அடிக்க வேண்டும் என்று அர்த்தம். ஏனென்றால் அந்த செடிகளில் ஏற்கனவே போதுமான அளவிற்கு சத்து இருக்கிறது. அப்படி இல்லாமல் சாதாரணமாக இருந்தால் இந்த தண்ணீரை நீங்கள் அப்படியே தெளித்து விட்டு விடுங்கள்.
இந்த முறையை நீங்கள் தினமும் கூட செய்யலாம் இதற்காக தனியாக இதையெல்லாம் ஊற வைத்து புளிக்க வைத்து அதன் பிறகு அதை ஒருநாள் முழுதும் செய்யும் வேலையாக இல்லாமல் அன்றாடம் நம் வேலையோடு சிறிது நேரம் இதற்காக ஒதுக்கினால் போதும் தோட்ட வேலையும் சேர்த்து முடித்து விடலாம். இதன் பிறகு மீதி இருக்கும் அந்த காய்கறி கழிவு சக்கைகளை வேண்டுமானால் நீங்கள் போஸ்ட்க்கு எடுத்து காய வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லை என்றால் குப்பையில் போட்டு விடுங்கள்.
இந்த முறைக்கு பயன்படுத்தும் பாட்டில் மட்டும் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி பருப்பு கலந்த தண்ணீரை ஊற்றும் பாட்டில் நார்மல் வாட்டர் பாட்டிலாக இருந்தால் போதும். ஆனால் காய்கறி கழிவுகளை கொட்டி வைக்கும் பாட்டில் கொஞ்சம் அகலமான பாட்டிலாக இருந்தால் தான் ஸ்ப்ரே செய்யும் போது தண்ணீர் காய்கறி கழிவுகள் அடைத்து கொள்ளாமல் தண்ணீர் தெளிக்க முடியும். இப்படி தெளிக்கும் தண்ணீர் வெயில் நேரத்தில் தெளிக்க கூடாது மாலை நேரத்தில் தெளிப்பது சிறந்தது.