- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 25 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 25 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். விடுமுறை நாள் என்பதால் பெருசாக அலைச்சல் இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் கொஞ்சம் வேலை பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்த நாள் நேரம் போவதே தெரியாது. இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவும் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பகை விலக கூடிய நாள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த விடுமுறை நாள் இனிமையாக நிறைவடையும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண்விரய செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரம் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்கும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். மாலை நேரம் வருவதற்குள் உங்களுடைய கடமைகளை எல்லாம் செய்து முடிப்பது நல்லது. நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள நேரம் ஒதுக்காதீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். மனதளவில் கவலைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இளைஞர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையிலும் வியாபாரத்தையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். விநாயகர் வழிபாடு மேலும் உங்களுக்கான நல்லதை செய்யும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று ‌

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரோடு அளவோடு பழகுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருடு போக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலைகளை கூட அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தோடு ஷாப்பிங் போவதாக இருந்தால் ஒன்றுக்கு பலமுறை யோசித்துக்கோங்க. பர்ஸ் காலியாகும். மற்றபடி இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். விருந்தாளிகளின் வருகையால் நேரம் போவதே தெரியாது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் என்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரம் வேண்டாம். புது முடிவுகள் எடுக்கும் போது அனுபவசாலிகளின் பேச்சை கேட்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. அளவோடு சாப்பிடுங்கள். ஆரோக்கியத்தோடு இருக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனதை ஈடுபடும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த பகை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சலால் உடல் உபாதைகள் வரலாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். இன்று நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று உங்களுக்கான ஓய்வும் கிடைக்கும். கூடுமானவரை பேசுவதை குறைத்துக் கொண்டால், மேலும் நன்மைகளை அடையலாம்.

சற்று முன்