- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்1 வெங்காயம் போதும் ரோட்டு கடை தண்ணி சட்னி அரைக்க, இது தெரிஞ்சிகிட்ட பிறகு, இந்த...

1 வெங்காயம் போதும் ரோட்டு கடை தண்ணி சட்னி அரைக்க, இது தெரிஞ்சிகிட்ட பிறகு, இந்த சட்னி யை இவ்வளவு ஈஸியா அரைக்கலாம்னு தெரியாம போச்சேன்னு கண்டிப்பா நெனைப்பீங்க.

- Advertisement -

ரோட்டு கடை சட்னி செய்வது எப்படி

இந்த ரோட்டு கடைகளில் கொடுக்கும் தண்ணி சட்னியை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அது நம் வீட்டில் அரைக்கும் சட்னி போல கெட்டியாக கூட இருக்காது, ஊற்றினால் சட்னி ஓடாமல் இருக்கவே பெரும் பாடுபட வேண்டும் அவ்வளவு தண்ணியாகத் தான் இருக்கும். அந்த சட்னி என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். இந்த சட்னிக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் தேங்காய் சட்னி சொல்லப் போனால் அதில் தேங்காயை சேர்த்து இருக்கவே மாட்டார்கள் அப்படி என்ன சேர்த்து அந்த சட்னி அரைப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தண்ணி சட்னி அரைக்க இரண்டே பொருள் இருந்தால் போதும் மிகவும் சுலபமாக அரைத்து விடலாம். இந்த சட்னியை ரோட்டு கடைகளில் வைக்கும் போது அங்கே பிரிட்ஜ் எல்லாம் இருக்காது, அதனால் சட்னி நீண்ட நேரம் ஆனாலும் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தேங்காய் சேர்க்காமல் தான் இந்த சட்னியை அரைப்பார்கள். நம் வீட்டில் இப்போது அதே முறையில் தான் அரைக்க போகிறோம், ஆனால் அதில் ஒரே ஒரு பொருளை மட்டும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சுவையாக அரைக்கலாம்.

- Advertisement -

ரோட்டுக்கடை சட்னியில் வெங்காயம் சேர்க்க மாட்டார்கள், கொஞ்சம் கூடுதல் சுவைக்காக இதில் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு வெங்காயம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் இந்தக் குறிப்பில் வெங்காயம் சேர்க்கும் இடத்தில் நீங்கள் அதை மட்டும் தவிர்த்து விடலாம்.

ரோட்டு கடை சட்னி செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக்க நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை லேசாக வதங்கினாலே போதும். வதங்கும் போதே பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் இத்துடன் வந்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வதக்கிய வெங்காயத்தை நன்றாக ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆற வைத்த வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அறித்துக் கொள்ளுங்கள். அரைத்து முடித்த பிறகு இதை ஒரு பௌலில் ஒரு மாற்றி நல்ல தண்ணீராக கலந்து கொள்ளுங்கள்.

இந்த சட்னி கொஞ்சம் காரமாக இருந்தால் நல்லா இருக்கும் எனவே காரம் உங்களுக்கு கூடுதலாக வேண்டும் என்றால் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: செட்டிநாடு ஸ்டைலில் ரொம்ப ரொம்ப ஈசியாக நம்முடைய வீட்டில் காரசாரமான காரச் சட்னி ரெசிபி எப்படி செய்வது? இந்த சட்னிக்கு 10 இட்லி கூட பத்தவே பத்தாது, அவ்ளோ ருசியாக இருக்கும்!

அடுத்து ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, சேர்த்த பிறகு,பெருங்காயத்தூளையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு, இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து விடுங்கள் சுவையான ரோட்டு கடை தண்ணி சட்னி தயார்.

சற்று முன்