- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரவை இருக்குதா உங்க வீட்டுல. அப்ப ஒரு முறை இந்த சப்பாத்தியை ட்ரை பண்ணி பாருங்க....

ரவை இருக்குதா உங்க வீட்டுல. அப்ப ஒரு முறை இந்த சப்பாத்தியை ட்ரை பண்ணி பாருங்க. கோதுமை மாவு சப்பாத்திக்கு ஒரு நாளைக்கு லீவு விட்ருங்க.

- Advertisement -

ஒரே மாதிரி சுவையில், ஒரே மாதிரி சப்பாத்தி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் போர் அடிக்கத்தான் செய்யும். என்னடா இது எப்போது பார்த்தாலும் சப்பாத்தியா என்று. உங்களுடைய வீட்டில் ரவை இருந்தால் ஒரு முறை வித்தியாசமாக இந்த ரவை சப்பாத்தியை முயற்சி செய்து பாருங்களேன். இதுவும் ருசியாக தான் இருக்கும். அருமையான சுவையில் சுலபமாக ரவை சப்பாத்தி எப்படி செய்வது. ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

செய்முறை

வருக்காத 1 கப் அளவு ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். (உப்புமாவுக்கு பயன்படுத்தும் பாம்பே ரவை தான்.) அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து, அதில் 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அந்த தண்ணீர் லேசாக கொதி வந்த உடனேயே, எடுத்து வைத்திருக்கும் ரவையை தண்ணீரில் கொட்டி, கரண்டியை வைத்து கலக்க தொடங்க வேண்டும். ரவை கட்டி பிடிக்க கூடாது. 3 நிமிடத்தில் ரவை தண்ணீரையெல்லாம் உறிஞ்சியதும் அடுப்பை அணைத்துவிட்டு, இதை ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அந்த சூட்டிலேயே கடாயில் விட்டு விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடத்தில் ரவை வெந்து நமக்கு கிடைக்கும். ஆனால் அந்த ரவை சூடோடுதான் இருக்கும். இந்த கடாயில் இருக்கும் ரவையை அகலமான பேஷனில் மாற்றி, கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டுக்கொண்டு பிசைய தொடங்க வேண்டும். கையில் அடிக்கடி தண்ணீரை தொட்டு தொட்டு மாவை பிசையுங்கள். அப்போது கை உங்களுக்கு சுட்டுக் கொள்ளாமல் இருக்கும்.

மாவு ரொம்பவும் வரவரன்னு கட்டியானது போல தான் இருக்கும்.  (இக்காலத்தைக் கொண்டும் தண்ணீர் தெளித்து பிசைய கூடாது.) ஆனாலும் நீங்கள் பிசையும் போது தண்ணீரில் கையை நனைத்து நினைத்து பிசைவீர்கள் அல்லவா, அந்த தண்ணீரே போதுமானது. இப்படி சூடாக இருக்கும் அந்த மாவை இரண்டு நிமிடம் தொடர்ந்து பிசைந்தால் வெடிப்புகள் இல்லாமல் சூப்பரான சப்பாத்தி மாவு மாதிரியே, ரவை மாவு தயாராகிவிடும். இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ரவை உருண்டைகளை அரிசிமாவை தொட்டு தேய்க்க வேண்டும். சப்பாத்தி தேய்ப்பது போலவே தேய்த்து எல்லா சப்பாத்தியையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வழக்கம் போல தோசை கல்லில் தேய்த்து வைத்திருக்கும் ரவை சப்பாத்திகளை போட்டு சுட்டு எடுக்க வேண்டியது தான்.

அடுப்பில் கல்லை வைத்து, நன்றாக சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கம் திருப்பி திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். எண்ணெய் தேவைப்படாது. சப்பாத்தி வெந்து நன்றாக உப்பி வரும்போது சப்பாத்தியை தோசைக்கல்லில் இருந்து எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி, பூரிக்கு வேர்க்கடலை தண்ணி சட்னி தள்ளுவண்டி ஸ்டைலில் ஈசியாக இப்படி மட்டும் செஞ்சு பாருங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க!

தேவைப்பட்டால் இறுதியாக இதில் நெய் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிடும்போது ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இதற்கு சைட் டிஷ்ஷாக உங்களுக்கு விருப்பப்படி எந்த கிரேவி, குருமா, குழம்பு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். கோதுமை மாவு சப்பாத்தியை விட ரொம்ப ரொம்ப சாஃப்டா லேயர் லேயர் ஆகவே இந்த சப்பாத்தி உங்களுக்கு கிடைக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்