- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்10 நிமிடத்தில், பஞ்சபோல இட்லிக்கு மாவு அரைக்க பக்காவான டிப்ஸ் உங்களுக்கு வேணுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க.

10 நிமிடத்தில், பஞ்சபோல இட்லிக்கு மாவு அரைக்க பக்காவான டிப்ஸ் உங்களுக்கு வேணுமா? இதோ தெரிஞ்சுக்கோங்க.

- Advertisement -

இட்லி மாவு அரைப்பதில் எத்தனையோ விதங்கள் இருக்கிறது. பத்தே நிமிடத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம், ஊற வைத்து, பஞ்சை போல இட்லிக்கு மாவு அரைப்பது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பத்து நிமிடத்தில் அரிசி உளுந்தை ஊற வைத்து, அரைக்க முடியுமா. அப்படி மாவு அரைத்தால், எப்படி இட்லி வரும். என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழும். ஆனால், மாவு இல்லை, அவசரத்திற்கு இட்லி மாவு தேவை எனும்போது இந்த குறிப்பையும் முயற்சி செய்து பார்க்கலாம். இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் பஞ்சு போல இட்லிக்கு மாவு அரைக்க ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த முறையில் இட்லி மாவு அரைப்பதற்கு 5 டம்பளர் இட்லி அரிசி, 1 டம்ளர் உளுந்து, 2 ஸ்பூன் வெந்தயம், தேவைப்படும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக ஒரே பாத்திரத்தில் போட்டு மூன்று முறை தண்ணீரில் கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை இந்த அரிசி பருப்பு வெந்தயம் தண்ணீரில் ஊறினால் போதும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த தண்ணீரை எல்லாம் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அரிசி பருப்பு வெந்தயத்தை கிரைண்டரில் ஒன்றாக போட்டு ஆட்டிக் கொள்ளலாம். (ஊற வைத்த இந்த தண்ணீரை தெளித்து தெளித்து ஆட்டலாம்.) குறைந்தது 35 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்குள் அரிசி உளுந்து வெந்தயம் எல்லாம் அரைபட்டு கிடைக்கும். நேரம் என்பது உங்களுடைய கிரைண்டர் அரைபடுவதை பொறுத்து தான் அமையும்.

இவ்வளவு குறைந்த நேரம் ஊறினால் அரிசி உளுந்து அரைப்படுமா, என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கலாம். நிச்சயம் அரைப்படும். ஒரு சில டேபிள் டாப் கிரைண்டரில் மட்டும் இந்த மாவை அரைப்பதில் சிரமம் இருக்கும். மற்றபடி சாதாரண கிரைண்டர் இருப்பவர்கள் வீட்டில் எல்லாம் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அரிசியானது மூன்று மணி நேரம் வரை ஊறினால் தான், அரைபடும்போது மாவு உபரியாகும். இப்படி மிகக் குறைந்த அளவு பத்து நிமிடம் மட்டுமே ஊற வைத்து மாவு அரைக்கும் போது, மாவு உபரியாகாது.

- Advertisement -

அரைத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு சாதாரணமாக 8 மணி நேரத்தில் புளித்து வராது. ஏனென்றால் இந்த மாவை நாம் அதிகநேரம் ஊற வைக்க வில்லை. ஆகவே, இரவு இப்படி அவசரத்துக்கு மாவை ஆட்டினால், இந்த மாவை முதலில் உப்பு போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பக்குவமாக கரைத்து விடுங்கள். மறுநாள் காலை இட்லி வார்ப்பதற்கு தேவையான மாவை மட்டும் சின்ன கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை சூடு படுத்த வேண்டும். அதன் மேலே ஒரு களவடையை வைத்து விட்டு, கரைத்து வைத்திருக்கும் மாவை அந்த கலவடையின் மேல் வைத்து விட வேண்டும். மாவு கிண்ணம் கீழே தண்ணீரில் படக்கூடாது. அப்படிப்பட்டால் மாவு வெந்து விடும். அந்த சுடுதண்ணீரின் ஆவிரி மட்டும் இட்லி மாவில் படும்படி வைத்துவிட்டு, மேலே தட்டு போட்டு மூடி விடுங்கள். மறுநாள் காலை மாவு சூப்பராக பொங்கி எழுந்து வரும்.

இதையும் படிக்கலாமே: ஒரு டம்ளர் ரவை இருந்தா போதும் நல்ல கிரிஸ்பியான, சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் சட்டுன்னு ரெடி. இத மட்டும் செஞ்சு வச்சிட்டீங்கன்னா இனி ஸ்நாக்ஸ் பிரச்சனையே கிடையாது.

இப்போது இந்த புளித்த மாவில் எப்போதும் போல இட்லி வார்த்து பாருங்கள். இட்லி சாஃப்ட்டாக கிடைக்கும். இதே மாவில் தோசை பணியாரம் கூட வார்க்கலாம். நன்றாக வரும். எப்போதும் இந்த முறையில் தான் மாவாட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவசரம் வீட்டில் மாவு இல்லை எனும்போது இப்படியும் ஒரு ஐடியா இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா, அதற்காகத்தான் இந்த குறிப்பு. உங்களுக்கு அவசர தேவை எனும்போது இதை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்